தனியார் பள்ளி மீது புகார்
தனியார் பள்ளி மீது புகார்pt desk

கோவை | உள்ளே வராதே தீட்டு... பூப்படைந்த மாணவிக்கு நேர்ந்த கொடுமை – தனியார் பள்ளி மீது புகார்

கிணத்துக்கிடவு அருகே செங்குட்டைபாளையம் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில், பூப்படைத்த மாணவியை வெளியில் அமரவைத்து தேர்வெழுத வைத்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
Published on

செய்தியாளர்: ரா.சிவபிரசாத்

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு அருகே உள்ள செங்குட்டைபாளையம் கிராமத்தில் செயல்பட்டு வரும் சுவாமி சிப்பவாணந்த மெட்ரிகுலேஷன் தனியார் பள்ளியில் 8ம் வகுப்பு பயின்று வரும் பட்டியலின மாணவி கடந்த 05 .04.2025 அன்று பூப்படைந்துள்ளார்.

பள்ளியில் முழு ஆண்டுத் தேர்வு நடைபெற்று வரும் நிலையில், , பள்ளிக்குச் சென்ற மாணவியை தீட்டாக கருதி தனியாக படியில் அமர வைத்து கடந்த 7ம் தேதி அறிவியல் தேர்வு, 9ம் தேதி சமூக அறிவியல் தேர்வுகளை பள்ளி நிர்வாகம் எழுத வைத்துள்ளனர்

தனியார் பள்ளி மீது புகார்
புதுச்சேரியில் நடந்த கொடூரம்| கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகள்!

இதையறிந்த மாணவியின் தாய் பதறித் துடித்து கேள்வி எழுப்பியுள்ளார். இங்கு அப்படி தான் நடக்கும். நீங்க வேணுமின்னா வேறு பள்ளியில் சேர்த்துக் கொள்ளுங்கள் எனக் கூறியதாகக் கூறப்படுகிறது எனவே பள்ளி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

school model
school modelfreepik

இதையடுத்து மக்கள் விடுதலை முன்னணியினர் மற்றும் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர்கள் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளனர். மேற்கண்ட பள்ளி நிர்வாகத்தின் மீது மாவட்ட கல்வித் துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையும் வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com