புதுச்சேரியில் நடந்த கொடூரம்| கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமிகள்!
புதுச்சேரியில், 2 சிறுமிகள் கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
14 வயது சிறுமியும், அவரது தோழியும் வீட்டிற்கு அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது திடீரென காணாமல் போயுள்ளனர். தொடர்ந்து, பெற்றோர் அளித்த புகாரின்பேரில், சிறுமிகள் இருவரையும் காவல் துறையினர் கண்டுபிடித்தனர்.
விசாரணையில், புஷ்பராஜ், மணிமாறன் என்ற 2 இளைஞர்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியது தெரியவந்தது. இதையடுத்து, போக்சோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்து, இருவரையும் காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்த சிறுமிகளை 10க்கும் மேற்பட்டோர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கியுள்ளதாகவும், அதில் 10 பேரை சிறுமிகள் அடையாளம் காட்டியுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. கடந்த ஆண்டு, இதே பகுதியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அதே பகுதியில் தற்போது மற்றொரு சம்பவம் அரங்கேறி உள்ளது, பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.