கோவை ராகிங் விவகாரம் - மாணவர்கள் மீது நடவடிக்கை எடுத்த கல்லூரி நிர்வாகம்

கோவை தனியார் கல்லூரியில் 2ஆம் ஆண்டு மாணவருக்கு மொட்டை அடித்து துன்புறுத்தி ராகிங் செய்த சீனியர் மாணவர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் அவர்களை கல்லூரி நிர்வாகம் இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது.
ragging
raggingpt web

கோவை அவிநாசி சாலையில் உள்ள பிஎஸ்ஜி தொழில்நுட்ப கல்லூரியின் விடுதியில் ஏராளமான மாணவர்கள் தங்கி பயின்று வருகின்றனர். இங்கு கடந்த ஆறாம் தேதி 2ஆம் ஆண்டு மாணவர் ஒருவரை சீனியர் மாணவர்கள் சிலர் மிரட்டி மது குடிப்பதற்காக பணம் கேட்டதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட மாணவர் பணம் தர மறுக்கவே அவரை அடித்து தாக்கிய சீனியர்கள், அவருக்கு மொட்டை அடித்தும் துன்புறுத்தியுள்ளனர்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர், தன் பெற்றோரிடம் கூறவே அவர்கள் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். இதன் பேரில் ஜூனியர் மாணவரை ராகிங் செய்த 7 சீனியர் மாணவர்களை காவலர்கள் இன்று காலை கைது செய்தனர்.

ragging
நாமக்கல்: வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

கைது செய்யப்பட்ட அந்த 7 மாணவர்களையும், கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்திருப்பதாக கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com