நாமக்கல்: வகுப்பறைகள் இல்லாததால் மரத்தடியில் அமர்ந்து படிக்கும் அரசுப்பள்ளி மாணவர்கள்

நாமக்கல் அருகே அரசுப் பள்ளியில் போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மரத்தடியில் அமர்ந்து பயிலும் அவலம் ஏற்பட்டுள்ளது.
போடிநாயக்கன்பட்டி அரசுப்பள்ளி
போடிநாயக்கன்பட்டி அரசுப்பள்ளிpt desk

போடிநாயக்கன்பட்டியில் செயல்பட்டு வரும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, கடந்த 2009 ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. ஆனால், போதிய வகுப்பறை கட்டடங்கள் இல்லாததால் மாணவ, மாணவிகள் மரத்தடியிலேயே பயின்று வருகின்றனர்.

போடிநாயக்கன்பட்டி அரசுப்பள்ளி
போடிநாயக்கன்பட்டி அரசுப்பள்ளிpt desk

320 மாணவர்கள் பயின்றுவரும் பள்ளியில் இரண்டு கழிவறைகள் மட்டுமே உள்ளதால் அம்மாணவ மாணவியர் கடும் அவதிக்கு ஆளாகியுள்ளனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் உமாவிடம் நாம் கேட்டபோது, “பள்ளியை நேரில் ஆய்வு செய்து, கூடுதல் கழிப்பறை கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

அதேபோல் உயர்நிலைப் பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் விரைவில் வகுப்பறை கட்டடங்கள் கட்டித்தரப்படும்” என தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com