கோவை குற்றப்பிரிவு
கோவை குற்றப்பிரிவுபுதிய தலைமுறை

குற்றம் குற்றமே | கோவையில் Online மோசடி வலை.. ரூ.1.43 கோடியை சுருட்டிய சைபர் குற்றவாளிகள்!

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்தவர் ஜெயபால கிருஷ்ணன் (65). கல்குவாரி நடத்தும் இவர், ஆன்லைன் முதலீட்டில் ஆர்வம் காட்டி இருக்கின்றார். அவரது அந்த ஆர்வத்தை பயன்படுத்தி 1 கோடியே 43 லட்சம் ரூபாயை நூதனமாக பறித்திருக்கின்றனர் கொள்ளையர்கள்.
Published on

செய்தியாளர் - சுதீஷ்

----

கோவை ரத்தினபுரி பகுதியைச் சேர்ந்த ஜெயபால கிருஷ்ணனுக்கு சமீபத்தில் ஃபாரின் வாட்சப் எண் போன்று ஒரு நம்பரில் இருந்து, “ரூபி டிரேடிங்கில் முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம்” என செய்தி வந்துள்ளது. தொழில் முனைவோரான இவர், ஆன்லைனில் வர்த்தகம் செய்யலாம் என நினைத்து ஆரம்பத்தில் சிறு தொகையை செலுத்தி இருக்கின்றார். அதற்கு கணிசமான லாபத்துடன் பணம் டிராஃப்ட் செய்து இருக்கின்றார்.

பின்னர் சிறப்பு சலுகை முதலீடு என்ற பெயரில் ஒரு செய்தி வந்திருக்கின்றது. அதனை நம்பி எட்டு தவணையாக 1 கோடியே 43 லட்சம் ரூபாயை அவர்கள் அனுப்பிய லிங்கில் உள்ள வங்கி அக்கவுண்டிற்கு கட்டினார். ஆறு மாத காலத்தில் நடந்த இந்த பண பரிவர்த்தனையின் அடிப்படையில் பெரும் தொகையை முதலீடாக செய்த இவர் ட்ராஃப்டு செய்ய முயன்றிருக்கின்றார்.

கோவை குற்றப்பிரிவு
குற்றம் குற்றமே: கோடியில் பேரம்.. சிக்கிய ED ஆபீசர்.. பின்னணி என்ன..?

ஆனால் அந்த ஆப்ஷன் பிளாக் செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில், தான் சைபர் கிரிமினல்களால் ஏமாற்றப்பட்டதை அறிந்த அவர், கோவை மாநகர இணையவழி குற்றப்பிரிவு காவல்துறையிடம் புகார் தந்திருக்கின்றார்.

புகாரின் அடிப்படையில் 420, 66டி, ஐ.டி. ஆக்ட் பிரிவின் கீழ்  வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடியில் ஈடுபட்ட சைபர் கிரைம் குற்றவாளிகளை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com