டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை: ஆனால்..? : அண்ணாமலை

கடந்த 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும், தர்மத்திற்குமான போட்டி என்று கோவையில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
Annamalai
Annamalaipt web

செய்தியாளர்: பிரவீண்

டெல்லியில் இருந்து விமானம் மூலம் கோவை வந்த கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளரும், மாநில தலைவருமான அண்ணாமலைக்கு அக்கட்சியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்...

PM Modi
PM Modipt desk

கோவை பாராளுமன்ற தொகுதியில் மூன்று வேட்பாளர்களுக்கு இடையே போட்டி கிடையாது. 70 ஆண்டு காலமாக தமிழகத்தில் நடந்து கொண்டிருக்கிற அதர்மத்திற்கும் மறுபுறம் தர்மத்திற்குமான போட்டி. தமிழக முதல்வரே இங்கு வந்து உட்கார்ந்தாலும் பாஐக வெற்றி பெறும். திமுகவின் எல்லா அமைச்சர்களும் வரட்டும் நாங்கள் தயார். தமிழகத்தின் அரசியல் மாற்றம் கோவையில் இருந்து துவங்க வேண்டும்.

தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்:

கோவையை இந்தியாவின் மேப்பில் அல்ல, இன்டர்நேசனல் மேப்பில் பதிய வைக்க போகிறோம். தமிழகத்தில் பாஜக சின்னத்தில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் அறிவிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் கூட்டணி கட்சித் தலைவர்கள் அவர்களது வேட்பாளர்களை அறிவித்திருக்கிறார்கள். இது சரித்திர தேர்தல். தமிழகத்தில் 39 தொகுதிகளிலும் வென்று, ஜூன் நான்காம் தேதி தமிழகத்திலிருந்து சரித்திரம் ஆரம்பமாகும்.

PM Modi
PM ModiFile Image

மோடி உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன்:

டெல்லி அரசியலில் எனக்கு விருப்பமில்லை. தமிழக அரசியலில் தான் விருப்பம். மோடி அவர்கள் உத்தரவிட்டதால் போட்டியிடுகிறேன். மோடி அவர்களின் உத்தரவை மதிக்க தெரிந்தவன். 2026ல் எங்களின் பாராளுமன்ற உறுப்பினர்களால் இரண்டு ஆண்டுகளில் என்ன மாற்றம் வந்திருக்கின்றது என்பதை காட்ட வேண்டும். 234 தொகுதிகளிலும் பாஜக உறுப்பினர்கள் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க முடியும்.

கோவையை அடிப்படையிலிருந்து மாற்ற வேண்டும்:

மோடியின் உத்தரவிற்கு நான் கட்டுப்பட்டவன். என்னுடைய அரசியல் தமிழகத்தில் இருக்க வேண்டும். மோடி தமிழகத்திற்கு அடிக்கடி வருவது 2026-ல் ஆட்சிக்கு வருவதற்காகத்தான். கோவையை அடிப்படையிலிருந்து மாற்ற வேண்டும். பாரதிய ஜனதா கட்சி எதற்காக தனியாக 23 இடத்தில் போட்டியிட வேண்டும். அந்தப் பகுதிகளை மாற்றிக் காட்ட வேண்டும் என்பதற்காக வளர்ச்சி என்றால் என்ன என்பதை மக்களுக்கு காட்டுவதற்காகவே போட்டியிடுகிறோம்.

Modi & Amit shah
Modi & Amit shahFile Image

பிரதமருக்கு 80 சீட் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது:

தமிழ்நாட்டு அரசியலில் தான் இருப்பேன். டெல்லி அரசியல் எனக்குப் பிடிக்காது. போக மாட்டேன். தமிழகத்தில் 2026-ல் ஆட்சி வரவேண்டும் என்றால் இந்த இரண்டு ஆண்டுகளில் முழுவதுமாக தமிழக அரசியலை மாற்றுவது மட்டுமில்லாமல், நிஜ வளர்ச்சி என்ன என்பதை இந்த தேர்தலில் வெற்றி பெற்று காட்டப் போகிறோம் தெளிவான பார்வையோடு இருக்கின்றோம். பிரதமருக்கு 80 சீட் உத்தரப்பிரதேசத்தில் இருக்கிறது. இன்னும் அவர் அந்த பக்கம் போகவில்லை.

2026ல் பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள்:

2024ல் கிடைக்கும் எம்பி-க்கள் மூலம் 700 நாட்கள் களப்பணியாற்றுவோம். அதனைத் தொடர்ந்து 234 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் திமுக தேர்தல் அறிக்கை கொடுப்பதும், அதில் இருப்பதெல்லாம் செய்யாமல் இருப்பதும் வாடிக்கை. 2026ல் பெட்ரோல் டீசல் இலவசம் என்று சொன்னாலும் சொல்வார்கள். டாய்லட் பேப்பர் இல்லை என்றார் திமுக தேர்தல் அறிக்கையை பயன்படுத்துங்கள். 2019ல் கொடுத்த 295 வாக்குறுதியையும் நிறைவேற்றி விட்டு 2024 தேர்தலுக்கு வந்திருக்கின்றோம்.

cm stalin
cm stalinpt desk

அறிவாலயத்தோடும் கோபாரபுரத்தோடும்தான் என் சண்டை:

எனக்கு இங்கு போட்டியிடும் வேட்பாளர்களுடன் சண்டை கிடையாது. பிரசாரத்தின் போது அவர்களது பெயர்களை கூட சொல்ல மாட்டேன் அறிவாலயத்தோடும் கோபாரபுரத்தோடும்தான் என் சண்டை. கீழே இருப்பவர்களுடன் கிடையாது. அதர்மத்திற்கும் தர்மத்திற்கும் யுத்தம் மற்ற வேட்பாளர்கள் என்ன வேண்டுமாலும் சொல்லட்டும். எல்லா அமைச்சர்களும் வருவார்கள். பணத்தை கொண்டு வந்து நூற்றுக் கணக்கில் கோடிக் கணக்கில் கொட்டுவார்கள்.

பா.ஜ.க தேர்தல் விதிமீறலில் ஈடுபடாது:

நாங்கள் ஓட்டுக்கு ஒரு ரூபாய் கூட கொடுக்க மாட்டோம். மாற்றத்தை நம்பி வந்திருக்கின்றோம். செலவு குறைந்த தேர்தலாக இந்த தேர்தல் இருக்கும் அடுத்த 40 நாட்கள் பூதக் கண்ணாடி போட்டு ஊடகங்கள் எங்களைப் பார்க்க வேண்டும்.33 மாதமாக சம்பாதித்த ஆயிரகணக்கான பணத்தை இங்கு வந்து திமுகவினர் செலவு செய்வார்கள. பா.ஜ.க ஒரு தேர்தல் விதிமீறலில் கூட ஈடுபடாது. தமிழக அரசியலில் மாற்றத்தை கோவை பாராளுமன்றத்தில் இருந்து கொண்டு வருவோம்.

சௌமியா அன்புமணி
சௌமியா அன்புமணிpt web

தருமபுரி வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன்

எங்களது 19 வேட்பாளர்கள் பெயர்களை பாருங்கள். அவர்களது தகுதிகளை பாருங்கள். அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டு இருக்கின்றதா என்பதை பார்க்கவும். பிற கட்சிகளில் வலைவீசி வேட்பாளர்களை தேடுகின்றனர். மாற்றுகின்றனர். இரண்டு கட்சிகளும் வேட்பாளர்களை மாற்றுவார்கள். தருமபுரி வேட்பாளராக சௌமியா அன்புமணி அறிவிக்கப்பட்டதை வரவேற்கிறேன். சுற்றுச்சூழலில் நிறைய பணிகளைச் செய்திருக்கிறார். எல்லோருடைய அனுபவமும் தமிழக அரசியலுக்கு வரவேண்டும். அதன் மூலம் தமிழகத்துக்கு வளர்ச்சி இருக்க வேண்டும். சௌமியா அன்புமணிக்கு வாழ்த்துகள்.

பாரதப் பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி மாதிரி பார்க்காதீர்கள்:

பாரத பிரதமரின் ரோடு ஷோவை லட்சக் கணக்கானோர் பார்க்க வருகின்றனர். அந்தப் பகுதியில் விடுமுறை கொடுத்திருக்கின்றார்கள். அந்த குழந்தைகள் விடுமுறை கொடுக்கப்பட்டதால் தங்களுடைய பிரதமரை பார்ப்பதற்கு வந்திருக்கின்றனர். விடுமுறை விட்டது யார்?. பிரதமர் வரும் பாதையில் விடுமுறை அளித்த பிறகு மாணவச் செல்வங்கள் பிரதமரை பார்ப்பதற்காகதான் வந்தார்கள். பாரதப் பிரதமரை பெட்டிக்கடை அரசியல்வாதி மாதிரி பார்க்காதீர்கள். அவர் விஸ்வ குரு என்று பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com