நடிகர் கரண்
நடிகர் கரண்pt desk

கோவை | மருதமலை முருகன் கோயிலில் நடிகர் கரண் சாமி தரிசனம்

மருதமலை முருகன் கோயிலில் திரைப்பட நடிகர் கரண் சாமி தரிசனம் செய்;தார். அப்போது பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்
Published on

செய்தியாளர்: ஐஸ்வர்யர

நடிகர் கரண், தமிழ் சினிமாவில் பல்வேறு கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளார். அதே போல முன்னணி நடிகர் அஜித்குமார், விஜய், சூர்யா, பிரசாந்த் உள்ளிட்டோருடன் இணைந்து பல்வேறு முக்கிய படங்களில் அவர்களுக்கு நிகரான கதா பாத்திரங்களில் நடித்து பெயர் பெற்றுள்ளார்.

இவர் நடித்த கண்ணெதிரே தோன்றினாள், திருநெல்வேலி, கருப்புசாமி குத்தகைதாரர் உள்ளிட்ட படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்றுத் தந்தது. 1980, 1990 களில் பல்வேறு முக்கிய படங்களில் நடித்த கரண், சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்திருந்த நிலையில், மீண்டும் பட வாய்ப்புகள் வரத் தொடங்கியுள்ளது.

நடிகர் கரண்
புதுச்சேரி | தற்காப்புக் கலைகளை கற்றுக் கொள்ளும் நடிகர் விஜய் சேதுபதி – வைரலாகும் வீடியோ

இந்நிலையில் கோவை மருதமலை முருகன் கோயிலில் சாமி தரிசனம் செய்ய வந்த அவரை கோயில் நிர்வாகத்தினர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்று சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். சாமி தரிசனத்தை முடித்துக் கொண்டு வெளியே வந்த அவரைக் கண்ட பக்தர்கள் அவருடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com