பெண்கள் பற்றிய பேச்சு.. ‘புதிய தலைமுறை’ முன்னிலை.. Youtubeஇல் சாதனை படைத்த முதல்வர் விஜயின் உரை!
செய்தியாளர் : எம்.மீரா
தமிழ்நாடு சட்டப்பேரவையில் முதலமைச்சர் விஜய் ஆற்றிய உரை, சட்டமன்றத்தைக் கடந்து சமூக வலைதளங்களிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. குறிப்பாக, அவரது உரை ஒளிபரப்பான யூடியூப் நேரலைகள் அதிகப்படியான பார்வையாளர்களை ஈர்த்து டிஜிட்டல் தளத்தில் சாதனை படைத்துள்ளதாக MacroMatrix வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
குறிப்பாக, பெண்களுக்கு எதிரான தனிப்பட்ட தாக்குதல்கள் மற்றும் தரக்குறைவான பேச்சுகளுக்கு எதிராக அவர் பதிவு செய்த கருத்துகள், யூடியூப் நேரலை மற்றும் அதனைத் தொடர்ந்து வெளியான வீடியோக்களில் பெரும் பார்வையாளர்களை ஈர்த்துள்ளது.
விஜய் தனது உரையில், “எனது அரசியல் வெற்றிக்கு முக்கியக் காரணம் பெண்கள். அவர்களுக்கு எதிரான எந்தவிதமான தரக்குறைவான பேச்சையும் நான் பொறுத்துக்கொள்ள மாட்டேன்” என்று கூறிய நேரத்தில் யூடியூப் நேரலைகளில் பார்வையாளர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்ததாக MacroMatrix வெளியிட்டுள்ள analytics அறிக்கை கூறுகிறது.
MacroMatrix வெளியிட்ட பதிவின்படி, முன்னணி தமிழ்ச் செய்தி நிறுவனங்களின் யூடியூப் நேரலைகளை ஒருங்கிணைத்துப் பார்க்கும்போது, சுமார் 2.7 லட்சத்துக்கும் அதிகமான peak concurrent live viewers இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. அதாவது, ஒரே நேரத்தில் பல்வேறு செய்திச் சேனல்களின் நேரலைகளைப் பார்த்தவர்களின் எண்ணிக்கை இந்த அளவைத் தாண்டியதாகக் கூறுகிறது. மேலும், உரை முடிந்த முதல் இரண்டு மணி நேரத்தில் வெளியான VOD எனப்படும் video on demand வீடியோக்கள் மொத்தமாக 18 லட்சத்துக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்றதாக அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இதன்மூலம், சட்டப்பேரவை உரை நேரலையில் மட்டுமின்றி, உரையின் முக்கியப் பகுதிகள் தனித்தனி வீடியோக்களாக வெளியான பின்னரும் பார்வையாளர்களிடம் தொடர்ந்து சென்றிருப்பது தெரியவருகிறது.
சேனல் வாரியான செயல்பாட்டிலும் குறிப்பிடத்தக்க வேறுபாடு காணப்படுகிறது. புதிய தலைமுறை TV சுமார் 85 ஆயிரம் peak concurrent live viewers உடன் நேரலை பார்வையாளர்களில் முன்னிலை பெற்றதாகக் கூறப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை உரையின் ஆரம்பகட்ட நேரலை பார்வையாளர்களை அதிக அளவில் ஈர்த்ததே இதற்கு முக்கியக் காரணமாக குறிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு மணி நேர VOD பார்வைகளில் அந்தச் சேனல் சுமார் 4.5 லட்சம் பார்வைகளைப் பெற்றதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், Polimer News சுமார் 65 ஆயிரம் peak live viewers உடன் அடுத்த நிலையில் இருந்தாலும், VOD பார்வைகளில் முன்னிலை பெற்றதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரத்தில் சுமார் 5.8 லட்சம் VOD views கிடைத்ததாக அந்தப் புள்ளிவிவரம் கூறுகிறது. உரையின் முக்கியப் பகுதிகளை வேகமாகத் தேர்வு செய்து, தாக்கம் ஏற்படுத்தும் தலைப்புகளுடன் குறு வீடியோக்களாக வெளியிட்டது இதற்கான முக்கியக் காரணமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது
News18 Tamil Nadu சுமார் 55 ஆயிரம் peak concurrent viewers மற்றும் 3.2 லட்சம் VOD views பெற்றதாகவும், Thanthi TV சுமார் 40 ஆயிரம் நேரலை பார்வையாளர்கள் மற்றும் 2.8 லட்சம் VOD views பெற்றதாகவும் அந்த அறிக்கை தெரிவிக்கிறது ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, விஜயின் சட்டப்பேரவை உரை தொலைக்காட்சி நேரலைக்குள் மட்டும் முடங்காமல், YouTube-ல் தனித்துவமான டிஜிட்டல் அலையை உருவாக்கியதாக இந்த analytics அறிக்கை காட்டுகிறது. நேரலை பார்வையாளர்களை ஈர்ப்பதில் புதிய தலைமுறை முன்னிலை பெற்ற நிலையில், உரைக்குப் பிறகு முக்கியக் காட்சிகளை குறு வீடியோக்களாகப் பரப்புவதில் Polimer News முன்னிலை வகித்ததாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

