\
கர்நாடகா மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு
கர்நாடகா மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடுweb

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் விஜய்.. கர்நாடகா மூகாம்பிகை கோயில் வழிபாடு பின்னணி என்ன?

தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் உள்ள புகழ்பெற்ற கொல்லூர் ஸ்ரீ மூகாம்பிகா தேவி கோயிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார்.
Published on
Summary

கர்நாடகா கொல்லூரில் உள்ள மூகாம்பிகை அம்மன் கோயிலில் தமிழக முதல்வர் விஜய் அரை மணி நேரம் சிறப்பு வழிபாடு செய்து, 1.6 கிலோ எடையுள்ள வெள்ளி வாளை காணிக்கையாக அளித்தார். டெல்லியிலிருந்து மங்களூரு வரை விமானத்தில், அங்கிருந்து 120 கிமீ சாலை மார்க்கமாக பயணம் செய்த அவர், பதவியில் இருக்கும் நிலையில் இக்கோயிலுக்கு வந்த மூன்றாவது முதல்வராகிறார்.

தமிழக முதல்வர் விஜய் கர்நாடகா மாநிலம் கொல்லூரில் உள்ள புகழ்பெற்ற மூகாம்பிகை அம்மன் கோயிலுக்குச் சென்று வழிபாடு செய்தார். டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மங்களூரு சென்ற முதல்வர் விஜய், சாலை மார்க்கமாக 120 கிலோ மீட்டர் தூரம் பயணித்து கொல்லூர் சென்றடைந்தார்.

சுமார் அரை மணி நேரம் வழிபாடு செய்த விஜய், 1 புள்ளி 6 கிலோ எடை கொண்ட வெள்ளி வாளை காணிக்கையாக வழங்கினார்.

எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் விஜய்..

தமிழக முதல்வர்களுக்கும் கொல்லூர் மூகாம்பிகை அம்மன் கோயிலுக்கும் இடையிலான ஆன்மிகத் தொடர்பு தொடர்கிறது. மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர் மூகாம்பிகை அம்மனுக்கு 2 புள்ளி 5 அடி நீள தங்க வாளை காணிக்கையாக அளித்திருந்தார். அவரைத் தொடர்ந்து, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவும் அங்கு சென்று சண்டிகா யாகம் நடத்தி வழிபாடு செய்தார்.

அந்த வரிசையில், தற்போது முதல்வர் விஜய் இக்கோயிலுக்குச் சென்று வழிபாடு நடத்தி வெள்ளி வாளை காணிக்கையாக அளித்துள்ளார். இதன் மூலம், பதவியில் இருக்கும்போது மூகாம்பிகை கோயிலுக்குச் சென்ற மூன்றாவது தமிழக முதல்வர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com