\
arudhra mother
arudhra motherpt

அரிய நோயால் பாதிக்கப்பட்ட குழந்தை! உதவி கேட்டு பதாகை ஏந்திய பெற்றோர்! உறுதியளித்த முதல்வர் விஜய்!

அரிய வகை மரபணு நோயால் பாதிக்கப்பட்ட 8 மாதப் பெண் குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் விஜய் உறுதியளித்துள்ளார். கோவையில் நடந்தது என்ன பார்க்கலாம்
Published on: 

செய்தியாளர் - ஆர்.ஆண்டனி லிவிங்ஸ்டன், ராஜ்குமார்.ர
ஒளிப்பதிவாளர்: பிரதாப்

கோவையில் ரூ.301 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள பெரியார் அறிவுலகத்தை முதல்வர் விஜய் இன்று திறந்து வைத்தார். இதற்காக கோவைக்கு விமானம் மூலம் வந்த முதலமைச்சர் விமானநிலையத்தில் இருந்து பெரியார் அறிவுலகம் வரை சாலைவலமாக வந்தார். அப்போது, முதல்வர் விஜய்க்கு தொண்டர்களும் பொதுமக்களும் வழிநெடுக வரவேற்பு அளித்தனர். மலர்களை தூவியும், கைகளை அசைத்தும் முதலமைச்சருக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.

arudhra mother
arudhra motherpt

அப்போது சாலையில் சிலர், ‘Help for Arudhra’ என்ற பதாகையுடன் நின்றுகொண்டிருந்தனர். பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தபடி வந்த முதல்வர் விஜய், அந்தப் பதாகை என்னவென்று விசாரிக்குமாறு தனது பாதுகாவலர்களிடம் தெரிவித்துள்ளார். இதையடுத்து, பாதுகாவலர்கள் பதாகையை வைத்திருந்தவர்களிடம் சென்று விசாரித்ததுடன், அந்தப் பதாகையையும் முதல்வரிடம் கொண்டு சென்றுள்ளனர்.

விசாரித்ததில், பொள்ளாச்சி அருகே உள்ள புளியம்பட்டியைச் சேர்ந்த குடும்பத்தினர் அந்தப் பதாகையை ஏந்தி நின்றது தெரியவந்தது. அவர்களது 8 மாதக் குழந்தையான ஆருத்ரா, முதுகெலும்பு தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். இது அரிய வகை மரபணு நோய்களில் ஒன்றாகும். குழந்தையின் சிகிச்சைக்குப் பெரும் தொகை தேவைப்படும் நிலையில், அதற்கான உதவியைக் கோரியே பெற்றோர் அந்தப் பதாகையை ஏந்தி நின்றுள்ளனர்.

இதுகுறித்து குழந்தையின் தாய் பிரியங்கா கூறுகையில், குழந்தையின் சிகிச்சைக்கு உதவி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதல்வர் விஜயைச் சந்திக்க வந்ததாகத் தெரிவித்துள்ளார். அப்போது, குழந்தையின் உடல்நிலை மற்றும் சிகிச்சைக்குத் தேவையான உதவிகள் குறித்து முதல்வரிடம் கோரிக்கை விடுத்ததாகவும் கூறியுள்ளார்.

இதையடுத்து, குழந்தையின் சிகிச்சைக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக முதல்வர் விஜய் நம்பிக்கை அளித்ததாகப் பிரியங்கா தெரிவித்துள்ளார். இந்தச் சந்திப்பு தங்களுக்குப் புதிய நம்பிக்கையை அளித்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com