முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்முகநூல்

"பிரதமர் பதவியின் தரத்தை தாழ்த்துகிறார் மோடி" - முதலமைச்சர்

“அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்எஸ்எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது” - முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சனம்.
Published on

பிரிவினைவாதத்தை தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே பிரதமர் மோடி தாழ்த்துவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

இது குறித்து தன் எக்ஸ் சமூக வலைதளத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள பதிவில்,

இரவில் தொலைக்காட்சி முன் பிரதமர் மோடி தோன்றினாலே, இந்திய மக்கள் அலறியதுதான் அவரது ஒரே சாதனை. பிரதமராக தொடரமுடியாத அச்சத்தில் பிரிவினைவாதத்தை தூண்டியும், எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களை அவதூறு செய்தும் தம் பதவியின் தரத்தையே பிரதமர் மோடி தாழ்த்த்தி கொள்கிறார்.

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்
”சனாதன தர்மத்திற்கு எதிரான பேச்சு; திமுகமீது மக்கள் கோபத்தில் உள்ளனர்” - பிரதமர் மோடி!

ஒருவர் உண்ணும் உணவு பற்றிப் புகார் கூறி வாக்கு சேகரிக்கும் மலிவான செயல் இதுவரை எந்த பிரதமரும் செய்யாதது!

அம்பேத்கர் இயற்றிய சட்டம் இருக்க வேண்டுமா? ஆர்எஸ்எஸ் சொல்லும் சட்டம் இருக்க வேண்டுமா என்பதை முடிவு செய்யும் தேர்தல் இது. இந்தியாவில் மத நல்லிணக்கம் நீடிக்க I.N.D.I.A. கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும்.” என தனது பதிவில் கேட்டுக் கொண்டுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com