"எங்களின் 40க்கு 40 வெற்றி, அதிமுகவின் கண்களை உறுத்துகிறது" - பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“மக்களவை தேர்தலில் திமுக 40/40 தொகுதிகளில் வெற்றி பெற்றிருப்பது, அதிமுகவின் மனசையும் கண்களையும் உறுத்துகிறது” என சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஸ்டாலின் பேச்சு.
சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்
சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்புதிய தலைமுறை

செய்தியாளர் - ராஜ்குமார்

தமிழ்நாடு சட்டப்பேரவை தொடங்கிய நாளிலிருந்தே தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வரும் அதிமுகவினர், இன்றும் மூன்றாவது நாளாக கள்ளக்குறிச்சி விவகாரத்தை கண்டித்து சட்டப்பேரவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், சபாநாயகர், “அவை செயல்படுத்துவதற்கு இடையூறாக உள்ள அதிமுக உறுப்பினர்களை அவைக்காவலர்கள் மூலம் வெளிவேற்றவும்” என அறிவித்து, “இன்று ஒரு நாள் அவை நடவடிக்கைளில் அதிமுக-வினர் பங்கேற்க கூடாது” என உத்தரவிட்டார்.

அதன்பின் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக ஒரு மணி நேரத்திற்கும் மேலாக அனைத்து கட்சி உறுப்பினர்கள் இந்த அவையிலே விரிவாக பேசியிருக்கிறார்கள். அதற்கு நானும் சரியான விளக்கத்தை அளித்திருக்கிறேன்.

அன்றைய தினம் அவையில் இருந்து முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக தனது கருத்தை பதிவு செய்து இருக்க வேண்டும். மாறாக தேவையற்ற பிரச்னையை கூறி கிளம்பினார்கள்.

சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்
“இரும்புக் கரம் கொண்டு அடக்கப்படும்” - விஷச்சாராயம் விவகாரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் உறுதி!

அவை விதிமுறைப்படி கேள்வி நேரம் முடிந்ததற்கு பிறகுதான் மற்ற பணிகளை எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் அதை பொருட்படுத்தாமல் ‘விதிமுறையை மீறி உடனடியாக அந்த பிரச்னையை எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்கிறார்கள்.

கேள்வி நேரம் முடிந்ததும் கள்ளக்குறிச்சி பிரச்னை பற்றிதான் விவாதிக்க போகிறோம் என்று சபாநாயகர் அவர்களும் தெளிவாக குறிப்பிட்டு சொல்லியும், அதையும் மீறி ஒரு கலவரத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே அதிமுக-வினர் திட்டமிட்டு இந்த பணியை செய்து கொண்டு இருக்கிறார்கள். அதற்கு பிறகே நீங்கள் (சபாநாயகர்) வழியில்லாமல் அவர்களை வெளியேற்றினீர்கள்.

மானிய கோரிக்கை விவாதத்தில், பிரதான எதிர்க்கட்சியான அதிமுக இருக்க வேண்டும். எனவே, அவர்கள் பங்கேற்க வேண்டாம் என்ற உத்தரவை மறு பரிசீலனை செய்து இதை சரி செய்ய வேண்டும் என்று நான் உங்களிடத்தில் (சபாநாயகர்) ஒரு வேண்டுகோள் வைத்தேன். நீங்களும் அதை ஏற்றுக் கொண்டு அதிமுக-வினருக்கு கோரிக்கை வைத்தீர்கள். ஆனால் அதையும் ஏற்றுக்கொள்ளாமல் மீண்டும் மீண்டும் வந்து ஒரு கலவரத்தை உருவாக்க வேண்டும் என்பதற்காக திட்டமிட்டு காரியத்தை செய்து கொண்டிருக்கிறார்கள் அவர்கள்.

40க்கு 40 என்ற திமுகவின் மக்களவை தேர்தல் வெற்றி, அவர்களுடைய மனசை உறுத்துகிறது. கண்ணை உறுத்துகிறது.
சட்டப்பேரவை | முதல்வர் மு.க.ஸ்டாலின்
வாணியம்பாடி: மலைச்சாலை தடுப்பு சுவரில் மோதி அந்தரத்தில் தொங்கிய லாரி

கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பான உண்மையான காரணத்தை அறிய ஓய்வு பெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. உள்துறை செயலாளர் மற்றும் டிஜிபி உடனடியாக சென்று அறிக்கை அளிக்க உத்தரவிட்டுள்ளேன. குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். மரணம் அடைந்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது. மாவட்ட எஸ்பி உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுவிலக்கு அமலாக்கத்துறை ஏடிஜிபி கட்டாய காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளார். இவ்வளவு நடவடிக்கையை இந்த அரசு எடுத்துள்ளது என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். அதிமுகவினர் ஆர்ப்பாட்டம் செய்வது நியாயம்தான். அது அவர்களுக்கு இருக்கக்கூடிய உரிமை.

ஆர்ப்பாட்டத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி பேசியுள்ளார்கள். இதே எதிர்க்கட்சித் தலைவர் (இபிஎஸ்), அன்று முதலமைச்சராக இருக்கும் போது அவர் மீது சிபிஐ விசாரணை ஒன்று வந்தது. திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி, எதிர்க்கட்சித் தலைவர் (இபிஎஸ்) மீது ஒரு குற்றச்சாட்டு கூறியிருந்தார். அதில் முறையீடு நடந்திருக்கிறது. அப்போது ‘சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்’ என்று உயர்நீதிமன்றமு உத்தரவிட்டது. ஆனால், சிபிஐ மீது ‘நம்பிக்கை இல்லாத காரணத்தினால்...’ அதற்கு தடை உத்தரவு வாங்கிய வீராதி வீரர்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்றார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com