”கட்சத்தீவு விவகாரத்தில் மத்திய அரசால் எந்த நடவடிக்கையும் இல்லை” - பேரவையில் முதல்வர் ஸ்டாலின் வேதனை
இன்று (ஏப்.7) தமிழக சட்டப்பேரவை கூடியது. இதில் பிரதான எதிர்க்கட்சியான அதிமுக எம்எல். ஏ.க்கள் தங்களது சட்டைகளில் ‘அந்த தியாகி யார்?’ என்று எழுதப்பட்ட பேட்ஜ் அணிந்து வந்திருந்தனர். டாஸ்மாக் முறைகேடு தொடர்பாக கவனம் ஈர்க்கும் வகையில், இவ்வாறு அவர்கள் பேட்ஜ் அணிந்திருந்தனர். தொடர்ந்து அனுமதி அளிக்கப்படவில்லை என்று அதிமுகவினர் அமளியில் ஈடுபட்டனர். பின்னர் வெளிநடப்பு செய்தனர்.
தொடர்ந்து, சட்டமன்றத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், இலங்கை சென்ற பிரதமர் மீனவர்கள் விவகாரத்தில் பெரிய நடவடிக்கை எடுத்திருப்பதாக தெரியவில்லை. இது வேதனை அளிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், ” கட்ச தீவை மீட்க வேண்டும் என்றும், இலங்கை சிறையில் வாடும் நம் மீனவகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் என்றும், இலங்கை கடற்படை கைப்பற்றிய படகுகளை திருப்பி தர வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தோம்.
இலங்கை சென்ற பிரதமர் இதுகுறித்து பேசி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீர்மானம் எடுக்கப்பட்டது அது பிரதமருக்கும் அனுப்பப்பட்டது. பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தின்போது கச்சத்தீவை மீட்பது குறித்து அவ்வளவு பெரிய நடவடிக்கை எடுக்கப்பட்டதுபோல தெரியவில்லை. இது வேதனை அளிக்கிறது. மீனவர்கள் விடுதலை படகுகள் விடுவிப்பு குறித்து எந்தவித நடவடிக்கையும் இல்லை.
மீனவர்கள் கைதாவதும், படகுகள் சிறைபிடிக்கப்படுவதும் தொடர்கிறது. கடல்பாசி வளர்ப்பு - 7000 மீனவர்களுக்கு சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். தங்கச்சிமடம் பகுதியில் ரூ.150 கோடி மதிப்பில் மீன்பிடித் தளம். படகு பராமரிப்பி சிப்பி அலங்கரிப்பு உள்ளிட்ட திட்டங்கள் மேம்படுத்தப்படும்.” என்று தெரிவித்துள்ளார்.