“கல்வி, மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும்”- சுதந்திர தின விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!

“கல்வி மாநிலப்பட்டியலுக்கு மாற்றப்பட்டால்தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலும் அகற்ற முடியும்” என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்
முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப் படம்

சென்னை தலைமைச் செயலகத்தில் சுதந்திர தின விழாவில் உரையாற்றிய முதலமைச்சர் ஸ்டாலின், “மக்களுடன் நேரடி தொடர்பு கொண்ட அனைத்து துறைகளும், மாநில பட்டியலில் இணைக்கப்பட வேண்டும். குறிப்பாக கல்வி மாநில பட்டியலுக்கு மாற்றப்பட வேண்டும். அதை செய்தால் தான் நீட் போன்ற கொடூரமான தேர்வு முறையை முற்றிலுமாக அகற்ற முடியும்.

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்Twitter
முதல்வர் மு.க.ஸ்டாலின்
“ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றுவோம்!”- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

கல்வி, பொருளாதாரம், மருத்துவம், வேளாண்மை, ஏற்றுமதி, திறன்மிகு மனித ஆற்றல் ஆகிய அனைத்து வகையிலும் தமிழ்நாடு சிறப்பான பங்களிப்பை இந்திய நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் வழங்கி வருகிறது. எல்லாருக்கும் எல்லாம் என்ற திராவிட மாடல் அரசின் சமூக நீதி நிர்வாக ஆட்சி முறை, இந்தியா முழுமைக்கும் பரவுமானால் அதைவிட மகிழ்ச்சியான செய்தி எதுவும் இருக்க முடியாது” எனக் கூறினார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com