“ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றுவோம்!”- முதல்வர் ஸ்டாலின் ட்வீட்!

77-வது சுதந்திர தினத்தையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோட்டை கொத்தளத்தில் தேசிய கொடி ஏற்றினார்.
மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்Twitter

77-வது சுதந்திர தினம் நாடு முழுவதும் இன்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.

இதனையடுத்து முதல்வர் ஸ்டாலின் சுதந்திர தின விழா உரையாற்றினார். அவர் பேசுகையில்,

“77வது ஆண்டினை தொடங்கி உள்ளது இந்திய ஒன்றியத்தின் விடுதலை நாள். இந்திய ஒன்றியத்தின் முக்கியமான அங்கம் நம் தமிழ்நாடு. இத்தகைய பார் போற்றும் தமிழ்நாடு மாநிலத்தில் முதலமைச்சராக பொறுப்பேற்ற நான், 3-வது ஆண்டாக இந்திய நாட்டின் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறேன். 400 ஆண்டுகள் பழமையான இந்த புனித ஜார்ஜ் கோட்டையின் கொத்தளத்தில் மூவர்ண கொடியை ஏற்றுவதில் நான் பெருமிதம் கொள்கிறேன். இந்த கொடியேற்றும் வாய்ப்பை எனக்கு வழங்கிய தமிழக மக்களுக்கு எனது அன்பான வணக்கம்.

மு.க.ஸ்டாலின்
'மணிப்பூரில் விரைவில் அமைதி திரும்பும்' - பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களால் தேர்வு செய்யப்பட்ட மாநில முதல்வர்களுக்கு சுதந்திர நாளில் கொடியேற்றும் உரிமையைப் பெற்றுத் தந்தவர் முதல்வராக இருந்த கருணாநிதி. மாநில அரசு 'சுயாட்சி உரிமைக் கொண்டதாக செயல்பட வேண்டும்' என்று அண்ணாவும் கலைஞரும் தொடர்ந்து குரல் எழுப்பி வந்தார்கள்'' என்று உரையாற்றினார்.

மேலும் தன் ட்விட்டர் பக்கத்தில், “நீங்கள் சமூக சுதந்திரத்தை அடையாத வரை, சட்டம் வழங்கும் சுதந்திரம் உங்களுக்கு எந்த பயனும் இல்லை என்றார் பாபாசாகேப் அம்பேத்கர்.

மதவாதம், பிரிவினைவாதம், பிற்போக்குவாதம், வெறுப்புணர்வு, வேலைவாய்ப்பின்மை, வன்முறை, விலையுயர்வு என ஒன்பதாண்டுகளாக இந்தியாவைப் பீடித்துள்ள பிணிகளை அகற்றி, அன்பும் - வேற்றுமைகளை மதிக்கும் பண்பும் - அனைத்துத் தரப்பினருக்குமான வளர்ச்சியும் நிறைந்த இந்தியாவுக்கு வழிவகுக்க இந்த விடுதலை நாளில் உறுதியேற்போம்!” என்றும் முதல்வர் பதிவிட்டுள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com