“பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் ஆரம்பம்” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக லோக்நிதி - சிஎஸ்டிஎஸ் அமைப்பு மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
ஸ்டாலின் - மோடி
ஸ்டாலின் - மோடிமுகநூல்

மக்களவைத் தேர்தல் தொடர்பாக லோக்நிதி - CSDS அமைப்பு மக்களிடம் நடத்திய கருத்துக் கணிப்பை சுட்டிக்காட்டியிருக்கும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பாஜக ஆட்சியின் முடிவுக்கான கவுண்ட்டவுன் ஆரம்பமாகிவிட்டதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள அவர், புகழ்பெற்ற லோக்நிதி - CSDS ஆய்வு அமைப்பு, 2024 மக்களவைத் தேர்தலில் முக்கியப் பிரச்சினைகள் எவை என மக்களிடம் கருத்துக்கணிப்பு நடத்தியுள்ளது. அதில்,

  • 27% பேர் வேலைவாய்ப்பின்மைதான் முக்கியப் பிரச்சினை என்றும்,

  • 23% பேர் விலைவாசி உயர்வு என்றும்,

  • 55% பேர் கடந்த 5 ஆண்டு பாஜக ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாகவும்,

  • ஏழை மக்களில் 76% பேர் விலைவாசி உயர்வே இத்தேர்தலில் முக்கியப் பிரச்சினை என்றும்

    கூறியுள்ளனர்.

ஸ்டாலின் - மோடி
"இளைஞர்கள் வாழ்க்கையை பாழாக்கும் குடும்பத்தை மீண்டும் தேர்வு செய்யக் கூடாது" - நிர்மலா சீதாராமன்

இதில் இருந்தே இந்த பாஜக ஆட்சியின் முடிவுக்கான Countdown ஆரம்பம் ஆகிவிட்டது. அதிகரித்துவிட்ட ஊழல், கார்ப்பரேட்டுகளிடமே மீண்டும் மீண்டும் குவியும் செல்வம், தொடரும் பாகுபாடுகள் என மக்களின் அன்றாட வாழ்வாதாரப் பிரச்சினைகளைத் தீர்ப்பதில், பத்தாண்டுகால பாஜக ஆட்சி படுதோல்வி அடைந்துவிட்டதை மக்கள் உணரத் தொடங்கி விட்டார்கள். 'சிலரைச் சில காலம் ஏமாற்றலாம்; எல்லோரையும் எப்போதும் ஏமாற்ற முடியாது!” என்றுள்ளார் காட்டமாக.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com