“மிக்ஜாம் புயல் மற்றும் தென்மாவட்டங்களில் பெய்த மழையை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்!” - முதல்வர்

சென்னை உட்பட 4 மாவட்டங்களிலும் மற்றும் தென் மாவட்டங்களிலும் பெய்த வரலாறு காணாத மழையினை தேசிய பேரிடராக அறிவித்து அப்பாதிப்புகளை சரிசெய்ய தேவையான நிதி ஒதுக்கிட வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடிக்கு மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடிபுதிய தலைமுறை

டிசம்பர் 4 ஆம் தேதி மிக்ஜாம் புயலால் பெய்த வரலாறு காணாத மழையும் பாதிப்பும் , அதனைதொடர்ந்து தென் மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையும், பெரும் சேதமும் மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது. எனவே மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை நிவர்த்தி செய்ய தேவையான நிதிகளை வழங்கிட வேண்டும் என்று ஏற்கனவே பிரதமரிடம் கடிதம் எழுதியிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின். இந்நிலையில் முதற்கட்டமாக மத்திய அரசு தமிழகத்திற்கு வருகை தந்து குறிப்பிட்ட வெள்ள நிவாரண தொகையினையும் வழங்கியிருந்தது.

இந்நிலையில் மிக்ஜாம் புயல் பாதிப்போடு தென் மாவட்டங்களில் பெய்து வந்த கனமழையினை கருத்தில் கொண்டு, ‘புயல் மற்றும் வெள்ள பாதிப்புகளை தேசிய பேரிடராக அறிவித்து நிவாரண பணிகளை செய்திட நிதி ஒதுக்க வேண்டும்’ என்று நேற்று இரவு பிரதமரை சந்தித்து மனு வழங்கியுள்ளார் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் - பிரதமர் மோடி
தூத்துக்குடியில் நாளை முதல்வர் ஆய்வு; மத்தியக்குழு இன்று ஆய்வு

அம்மனுவில் அவர், “மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் கடந்த 47 ஆண்டுகளாக இல்லாத வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

தென் மாவட்டங்களில் வரலாறு காணாத வகையில் 100 ஆண்டுகளாக இல்லாத கனமழை பெய்துள்ளது.

இந்த இரு மழையாலும் ஏற்பட்ட பாதிப்புகளை கருத்தில் கொண்டு தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து 2000 கோடி அவசர நிவாரண பணிகளுக்காக வழங்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com