புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்முகநூல்

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்|சுமார் 4 லட்சத்தில் 25000 மாணவிகள் பயன்!

புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்து இப்போது வரை கலை அறிவியல் ,பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரியில் படிக்கிற மாணவிகள் உட்பட சுமார் 4 லட்சத்தில் 25000 மாணவிகள் பயனடைந்திருக்கிறார்கள் .
Published on

6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் படித்து, மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவிகளுக்கும் மாதம் ரூ.1,000 வழங்கும் வகையில் புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தின் தொடக்க விழா தூத்துக்குடி காமராஜ் கல்லூரி வளாகத்தில் இன்று நடைபெற்றது.

இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் திட்டத்தின் விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து மாணவிகளுக்கு வங்கி கணக்கு அட்டைகளை வழங்கினார்.

இதனைத்தொடர்ந்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் பெண்களுக்கு கல்வி மறுக்கப்பட்டதையும், 1947 முதல் 1967 வரையிலான 20 ஆண்டு காலத்தில் திறக்கப்பட்ட மொத்த கல்லூரிகளின் எண்ணிக்கை 68 என்றும், ஆனால், தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த 69 முதல் 1969 முதல் 75 வரை காலகட்டத்தில் மட்டும் 97 அரசு கல்லூரிகளை திறந்தார் என்றும், பேசினார்.

மேலும், கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் மாதம்தோறும் குடும்பத்தலைவிகளுக்கு ₹1000 திட்டம், கட்டணமில்லா விடியல் பயணம் திட்டத்தால் இதுவரை 527 கோடி பயணங்கள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது என்றும், வேலைக்கு செல்லும், பெண்கள் வெளியூரில் பாதுகாப்பாகவும், எல்லா வசதிகளுட ம் தங்குவதற்கு தோழி என்ற விடுதிகள், மகளிர் சுய உதவிக்குழுகளுக்கு கடன் உதவி என எண்ணற்ற மகளிர் திட்டங்களை இன்றைக்கு நிறைவேற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
SBIயில் 13,735 காலியிடங்கள்: தமிழ்நாட்டில் 336..!

மேலும், இதுக்குறித்து பேசிய அவர், இந்த வரிசையில்தான் புதுமைப்பெண் திட்டத்தையும் உருவாக்கினேன். இது 2021 தேர்தல் வாக்குறுதியில் சொல்லப்படாத திட்டம். இது பெரும் அளவில் தொடர்ந்து நிதி ஒதுக்க வேண்டிய தேவையுள்ள திட்டம் .

இந்தவகையில், தமிழ்நாட்டில், அரசு பள்ளிகளில் படிக்கிற மாணவிகளின் கல்வி சேர்க்க குறைவா இருக்கிறது என்ற புள்ளி விவரங்களை நான் பார்த்தேன்.மேல் படிப்பு படிக்க திறமையும், மனசும் இருந்தாலும் பணம் இல்லாததால படிப்பை கைவிடுறாங்கள் என்று தெரிந்து வருத்தமடைந்தேன்.

புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம்
முதல் முறையாக... ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!

அப்போதுதான், மூவலூர் ராமாமிருந்தம் அம்மையார் உயர்கல்வி திட்டம் எனும் புதுமைப்பெண் திட்டத்தை உருவாக்கினேன். இதனால், அரசுபள்ளிகளில், ஆறாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை படிச்சு மேற்படிப்பு சேறும், அனைத்து மாணவிகளுக்கு மாதம் ₹1000 ரூபாய் அவர்களது வங்கிக் கணக்குகளிலேயே நேரடியாக செலுத்தப்பட்டு கொண்டிருக்கிறது.

புதுமைப்பெண் திட்டம் தொடங்கிய காலத்திலிருந்தே இப்போது வரைக்கும் கலை அறிவியல் ,பொறியியல், தொழிற்படிப்பு, மருத்துவ கல்லூரியில் படிக்கிற மாணவிகள் உட்பட சுமார் 4 லட்சத்தில் 25000 மாணவிகள் பயனடைந்திருக்கிறார்கள் .

இந்த திட்டம் தொடங்கப்பட்டது முதல் , மாணவிகளுக்கு ஊக்கத்தொகையாக 590 கோடியே 66 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டிருக்கிறது. இதை அரசுக்கு செலவிடமாக விருதாம ஒரு தந்தைக்குரிய கடமையா பெண் குழந்தையுடைய கல்விக்கான மூலதனமாக தான் நான் பார்க்கிறேன் .

சில நாட்களுக்கு முன்பு படித்த அறிக்கை ஒன்றில், இந்த திட்டத்தின்காரணமாக, கல்லூரிகளில் மாணவர்கள் கூடுதலாக சேரத் தொடங்கி இருக்கிறார்கள் என்கிற விவரம் அந்த அறிக்கையில் இருந்ததை கண்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன்.” என்று தெரிவித்திருந்தார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com