Junior Associate
Junior Associatesbi

SBIயில் 13,735 காலியிடங்கள்: தமிழ்நாட்டில் 336..!

தமிழ்நாட்டில் உள்ள sbi வங்கிகளில் Junior Associate பதவிக்கு 336 காலிப்பணியிடங்கள் இருப்பதாக அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை காணலாம்.
Published on

நாடு முழுவதும் உள்ள SBI ல் JUNIOR ASSOCIATES (CUSTOMER SUPPORT & SALES) வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை பிரிவின் ஜூனியர் அசோசியேட்ஸ் பதவிக்கான மொத்த காலியப்பணியிடங்கள் 13,735 இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்தவகையில், தமிழ்நாட்டில் 336 பணியிடங்களும் , புதுச்சேரியில் 4 என மொத்தம் 340 பணியிடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே, இதில் விண்ணப்பிக்க ஆர்வம் உள்ளவர்கள் வரும் 2025 ஜனவரி 7 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்திட வேண்டும்

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் https://bank.sbi/web/careers/current-openings அல்லது https://www.sbi.co.in/web/careers/current-openings என்ற இணையதளத்தில் உள்ள (Recruitment of Junior Associates 2024) என்ற லிங்கில் சென்று ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்சி,எஸ்டி. மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு கட்டணம் செலுத்த தேவையில்லை. மற்ற அனைத்து பிரிவினரும் ரூ.750 செலுத்த வேண்டும்.

வயது வரம்பு: 28-க்குள் இருக்க வேண்டும். 2.4.1996 தேதிக்கு முன்பும் 1.4.2004-க்கு பின் பிறந்திருக்கக்கூடாது.

கல்வி தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

மேலும், முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் தமிழ் மொழி தகுதித் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

Junior Associate
முதல் முறையாக... ஆளுநரை சந்திக்கிறார் தவெக தலைவர் விஜய்!

தகுதித் தேர்வு : 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் தமிழ் மொழியில் படித்தவர்களுக்கு தகுதித் தேர்வு கிடையாது. மதிப்பெண் சான்றிதழை சரிபார்ப்புக்கு பின்பு இறுதி முடிவுகள் வெளியிடப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.24,050 - ரூ.64,480 வழங்கப்படும்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com