“மக்களாட்சி நீடிக்குமா? ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளது”- முதல்வர் விமர்சனம்

தங்கள் ஐபோனில் வந்த எச்சரிக்கை செய்தி குறித்து எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியிருந்த நிலையில், தோல்வி பயம் காரணமாக பாரதிய ஜனதா கட்சி, தொலைபேசிகளை உளவு பார்க்கும் செயலில் ஈடுபட்டதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்திருக்கிறார்.
mk stalin
mk stalinpt web

சென்னை திருவான்மியூரில், தமிழ்நாடு ஆதிதிராவிடர் நலக்குழு செயலாளரும், பூந்தமல்லி சட்டமன்ற உறுப்பினருமான கிருஷ்ணசாமி இல்லத் திருமணத்தை நடத்தி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்திரா காந்தி ஆட்சிக்காலத்தில் எமர்ஜென்சியை எதிர்த்தால் திமுக ஆட்சி கலைக்கப்படும் என்று எச்சரிக்கப்பட்டதை நினைவு கூர்ந்தார்.

ஆட்சியை நம்பி அல்ல, ஜனநாயகத்தை நம்பியே இருப்பதாகவும், உயிரே போனாலும் எமர்ஜென்சியை எதிர்த்து நிற்போம் என்றும் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி கூறியதாக அவர் தெரிவித்தார். இப்போது மக்களாட்சி நீடிக்குமா? ஜனநாயகம் பாதுகாக்கப்படுமா என்பது கேள்விக்குறியாக உள்ளதாகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விமர்சித்தார்.

முன்னதாக தங்கள் ஐபோன்களில் ஹேக்கிங் குறித்த எச்சரிக்கை வந்ததாக எதிர்க்கட்சி உறுப்பினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். தங்கள் போன்கள் உளவு பார்க்கப்படுவதாக மல்லிகார்ஜூன கார்கே, கே.சி. வேணுகோபால், சீதாராம் யெச்சூரி, மஹூவா மொய்த்ரா, சசிதரூர், அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட தலைவர்கள் தங்கள் போன்களுக்கு எச்சரிக்கை செய்தி வந்ததாக குற்றம் சாட்டினர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com