பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் மரியாதை

பசும்பொன்னில் முத்துராமலிங்கத் தேவரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதை
தேவர் நினைவிடத்தில் முதல்வர் மரியாதைpt web

முத்துராமலிங்க தேவரின் 116 வது ஜெயந்தியும், 61வது குருபூஜை விழாவும் இன்று கொண்டாடப்படும் நிலையில் தமிழக முதல்வர் கோரிப்பாளையத்தில் முதல் நிகழ்வாக தேவர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அவருடன் தமிழக அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, அன்பில் மகேஷ், பி. மூர்த்தி, பி.டி.ஆர், கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், டி.ஆர்.பி ராஜா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

பின்னர் சாலை மார்க்கமாக முதல்வர் இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் சென்றார். அங்கு தேவரின் நினைவிடத்தில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, அனிதா ராதாகிருஷ்ணன், மூர்த்தி உள்ளிட்டோர் உடன் பங்கேற்றனர்.

முன்னதாக மதுரையில் கோரிப்பாளையம் மற்றும் அப்பலோ ஆகிய இரு இடங்களில் புதிய மேம்பாலம் கட்டும் பணியை முதல்வர் துவக்கி வைத்தார். அதனை தொடந்து தெப்பக்குளம் பகுதியில் உள்ள மருதுபாண்டியர்கள் சிலைக்கு மாலை அணிவித்து முதல்வர் மரியாதை செலுத்தினார்.

இதனை அடுத்து முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெப்பக்குளத்தில் உள்ள மருது சகோதரர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின் அவரும் பசும்பொன் சென்று தேவர் சிலைக்கு மரியாதை செய்தார். அதிமுக பொதுச்செயலாளரான பின் முதன்முறையாக பசும்பொன் சென்றுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவருடன் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், கே.டி. ராஜேந்திர பாலாஜி, திண்டுக்கல் சீனிவாசன் போன்றோர் உடனிருந்தனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com