கலைஞர் கருணாநிதி
கலைஞர் கருணாநிதிமுகநூல்

முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி நினைவு நாள் | முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை

திமுக-வின் மறைந்த முன்னாள் தலைவரும், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று.
Published on

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக-வின் மறைந்த தலைவருமான கலைஞர் கருணாநிதியின் 6வது ஆண்டு நினைவு தினம் இன்று. இதையொட்டி, கட்சி தொண்டர்களும் அரசியல் பிரமுகர்களும் இன்று அவரை நினைவுகூர்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக பல இடங்களில் திமுகவினர் அமைதி ஊர்வலத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கலைஞர் நினைவிடம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
கலைஞர் நினைவிடம்: முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

இந்தவகையில் சென்னை ஓமந்தூரார் வளாகத்தில் உள்ள கலைஞர் கருணாநிதி சிலைக்கு கீழே வைக்கப்பட்ட உருவப்படத்துக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி, அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

கலைஞர் கருணாநிதி
தூத்துக்குடி: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி! மனைவி இறந்த செய்தி கேட்டு கணவரும் உயிரிழந்த சோகம்

இதனையடுத்து சென்னை வாலஜா சாலையில் இருந்து கலைஞர் நினைவிடம் நோக்கி அமைதிப் பேரணி நடத்தினர். இதில் திமுக-வை சேர்ந்த பல முக்கிய தலைவர்களும் கலந்து கொண்டனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com