\
அங்குசாமி - பொன்மாடத்தி
அங்குசாமி - பொன்மாடத்திpt desk

தூத்துக்குடி: இறப்பிலும் இணைபிரியாத தம்பதி! மனைவி இறந்த செய்தி கேட்டு கணவரும் உயிரிழந்த சோகம்

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே மனைவி இறந்த செய்தியை கேட்டு, கணவனும் உயிரிழந்த சோக சம்பவம் அரங்கேறியுள்ளது.
Published on

சேதுக்குவாய்த்தான் பகுதியை சேர்ந்த அங்குசாமி - பொன்மாடத்தி தம்பதி. இவர்களுக்கு இரு மகன்கள் உள்ள நிலையில், ஆளுக்கொரு மகன் வீட்டில் வசித்து வந்துள்ளனர். இந்தநிலையில் கடந்த 3 ஆம் தேதி, உடல் நலக்குறைவால் படுத்த படுக்கையாக இருந்த பொன் மாடத்தி காலமாகியுள்ளார். இருப்பினும் இந்த தகவலை அவரது குடும்பத்தினர் அங்குசாமிக்கு தெரிவிக்கவில்லை.

அங்குசாமி - பொன்மாடத்தி தம்பதி
அங்குசாமி - பொன்மாடத்தி தம்பதி

இந்தநிலையில், கடந்த ஐந்தாம் தேதி, பொன்மாடத்திக்கு இறுதி சடங்கு நடைபெற்றுள்ளது. அப்போதே அங்குசாமிக்கு அவரது மனைவி இறந்த செய்தி தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இறுதிச்சடங்கில் பங்கேற்ற அங்குசாமிக்கு நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அவர், செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.

அங்குசாமி - பொன்மாடத்தி
ஆவடி: குளிர்சாதனப் பெட்டியை திறந்த 5 வயது சிறுமிக்கு நேர்ந்த பரிதாபம் - போலீசார் விசாரணை

மனைவி இறந்த செய்தியை கேட்டு கணவனும் உயிரிழந்த சம்பவம், அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com