வடமாநிலங்களில் பரப்புரை செய்ய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவா? - கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.
mk stalin
mk stalinpt web

வடமாநிலங்களில் பரப்புரை செய்வது குறித்து தமிழ்நாடு முதல்வரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கட்சி நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். அண்ணா அறிவாலயத்தில் திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு உள்ளிட்ட நிர்வாகிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டார்.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் மூன்று விஷயங்கள் பேசப்பட்டன. குறிப்பாக நேற்று இளைஞரணி நிர்வாகிகளின் ஆலோசனைக் கூட்டம் அன்பகத்தில் நடந்தது. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடந்த கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் கலந்துகொண்டார். இதில், தேர்தல் காலத்தில் சரியாக செயல்படாத மாவட்ட செயலாளர்களை மாற்றி, புதிதாக இளைஞர்களை மாவட்ட செயலாளர்களாக நியமிக்க ஆலோசனையும் நடந்தது.

அதேபோல் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் INDIA கூட்டணியில் உள்ளார். நாடு முழுவதும் நடந்த பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்டு உரையாற்றியுள்ளார்.

இந்நிலையில், மக்களவை தேர்தலில் மீதமுள்ள மூன்று கட்ட தேர்தல்கள் அடுத்தடுத்து நடக்க உள்ளன. இதன்காரணமாக டெல்லி சென்று தேர்தல் பரப்புரையில் ஈடுபடலாமா என்பது குறித்தான ஆலோசனையும் மேற்கொண்டார்.

உள்ளாட்சி தேர்தல் வரும் டிசம்பரில் நடக்க உள்ளது. அதுதொடர்பாகவும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட இருக்கிறது. அதுதொடர்பாகவும், ஆலோசனைகளை மேற்கொண்டார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com