“மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது” - முதல்வர் மு.க.ஸ்டாலின்

மூன்று மாநிலத் தேர்தல் முடிவுகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மூன்று மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள், வரும் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் அளித்துள்ள நேர்க்காணலில், “சட்டப்பேரவை தேர்தலில், மாநில அளவிலான பிரச்சனைகளை முன்வைத்து மக்கள் வாக்களிக்கிறார்கள்.

ராஜஸ்தான் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில், சில லட்சம் வாக்குகள் மட்டுமே பாஜகவை விட காங்கிரஸ் குறைவாக பெற்றுள்ளது. வரும் நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி வெற்றி பெறும். ஆளுநர் ஆர்.என்.ரவியுடன் ஏற்கனவே பல சந்திப்புகளை நடத்தப்பட்டு இருக்கிறது. எனவே மாநில நலனில் அக்கறை செலுத்தி ஆளுநர் செயல்பட்டால் நன்றாக இருக்கும்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
நேரு விளையாட்டு அரங்கம்: பதக்க கனவுகளுக்குத் தடை போடும் மின் விளக்கு!

கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியில் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் எந்த திட்டமும் முறையாக செயல்படுத்தாத காரணத்தால்தான் பெருவெள்ளம் ஏற்பட்டது” என்று கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com