ஸ்டாலின்
ஸ்டாலின்புதியதலைமுறை

ஒரே நாடு ஒரே தேர்தல்: “சாத்தியமற்றது; ஒத்துவராதது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. 'தேர்தல் சுழற்சி, மாநில பிரச்னை உள்ளிட்ட வேறுபாடுகளை கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றது” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
Published on

“ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடைமுறைக்கு சாத்தியமற்றது. பாஜகவால் அதை ஒருபோதும் செயல்படுத்த முடியாது” என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின்கோப்புப்படம்

தன் பதிவில் அவர், “ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது இந்தியாவின் கூட்டாட்சித் தன்மையை சிதைப்பதற்காக கொண்டுவரப்பட்டுள்ளது. தேர்தல் சுழற்சி, மாநில பிரச்னை உள்ளிட்ட வேறுபாடுகளை கருத்தில் கொண்டால் இது சாத்தியமற்றது. பாஜகவின் ஈகோவை திருப்திபடுத்தவே ஒரே நாடு ஒரே தேர்தல் பரிந்துரை வழங்கப்பட்டிருக்கிறது. இத்திட்டத்தை பாஜகவால் செயல்படுத்த முடியாது.

ஸ்டாலின்
“கிரீம் பன்னுக்கு எவ்வளவுவரி என கேட்கமுடியாத நிலை” முப்பெரும் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

ஒரு கட்சியின் பேராசைக்காக ஜனநாயகத்தை வளைக்க முடியாது திசைதிருப்பும் நடவடிக்கையில் நேரத்தை செலவிடாமல் பிரச்னைகளுக்கு தீர்வுகாண வேண்டும் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு, மாநில நிதிப் பகிர்வில் அரசு தீர்வுகாண வேண்டும்” என்று முதலமைச்சர் கூறியுள்ளார்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com