\
நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம்
நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம்pt

'மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம்..' விவசாயி புகாரில் எழுத்தர் பணியிடைநீக்கம்!

கடலூரில் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் பெற்றதாக விவசாயி புகார் தெரிவித்ததில் எழுத்தர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்..
Published on
Summary

கடலூர் மாவட்ட மருவாய் நேரடி கொள்முதல் நிலையத்தில் நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம் கேட்டதாக விவசாயி ஒருவர் தொலைபேசியில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமனிடம் புகார் தெரிவித்தார். அதிர்ச்சியடைந்த அமைச்சர், சம்பந்தப்பட்ட பட்டியல் எழுத்தரை உடனடியாக பணியிடை நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டதுடன், விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எச்சரித்தார்.

கடலூர் மாவட்டத்தில் நேரடி கொள்முதல் நிலையங்களில் லஞ்சம் கேட்பதாக விவசாயி ஒருவர் அளித்த புகாரின் அடிப்படையில், சம்பந்தப்பட்ட பட்டியல் எழுத்தரை உடனடியாக பணியிட நீக்கம் செய்ய மாவட்ட ஆட்சியருக்கு உணவுத்துறை அமைச்சர் திரு.வெங்கட்ராமன் உத்தரவிட்டார்.

இன்று கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் உணவுத்துறை அமைச்சர் வெங்கட்ராமன் ஆய்வு மேற்கொண்டார். இதன் ஒரு பகுதியாக வடலூர் அருகே உள்ள மருவாய் வருவாய் கிராமத்தில் செயல்படும் நேரடி கொள்முதல் நிலையத்தில் ஆய்வுசெய்தார். அப்போது அங்கு நெல் கொடுக்க வந்த விவசாயி ஒருவருக்கு தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு பேசிய அமைச்சர், நிலையத்தின் செயல்பாடுகள் எப்படி உள்ளது, அதிகாரிகள் பணம் ஏதாவது கேட்கிறார்களா என கேட்டார். அதற்கு பதிலளித்த விவசாயி, தான்கொண்டு வந்த நெல் மூட்டைக்கு 50 ரூபாய் "லஞ்சம்" கொடுத்தால் தான் எடைபோடுவதாகவும், லஞ்சம் கொடுக்காவிட்டால் மிரட்டுவதாகவும் குற்றம்சாட்டினார்.

லஞ்சம் கொடுக்கக் கூடாது என தொடர்ந்து அரசு சார்பில் கூறி வரும்நிலையில் இவ்வாறு நடப்பதை கேட்டு அதிர்ச்சியடைந்த அமைச்சர், உடனடியாக மருவாய் நேரடி கொள்முதல் நிலையத்தில் பணியாற்றும் பட்டியல் எழுத்தரை பணியிட நீக்கம் செய்யுமாறு மாவட்ட ஆட்சியர் திரு. சி.பி.ஆதித்யா செந்தில்குமார் அவர்களுக்கு உத்தரவிட்டார். விவசாயிகளிடம் லஞ்சம் வாங்கும் எந்த அதிகாரியாக இருந்தாலும் கடும்நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் எச்சரித்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நெல் மூட்டைக்கு 50 ரூபாய் லஞ்சம்
"தமிழ்நாட்டில் 7,297 பேருக்குப் பாம்புக்கடி" - திருவண்ணாமலை முதலிடம்!
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com