கிருஷ்ணகிரி இரு சமூகத்தினரிடையே மோதல்
கிருஷ்ணகிரி இரு சமூகத்தினரிடையே மோதல்pt desk

கிருஷ்ணகிரி | இரு சமூகத்தினரிடையே மோதல்.. 23 பேர் மீது வழக்கு - 13 பேர் கைது

கிருஷ்ணகிரி அருகே கோயில் புதுப்பிக்கும் விவகாரத்தில் பட்டியலின மக்களின் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து பதற்றம் அதிகரித்துள்ளதால் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி மாவட்டம், சோக்காடி கிராமத்தில் இரு பிரிவினர் இடையே கோயில் புதுப்பிக்கும் விவகாரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இந்த மோதலின் போது இரு பிரிவினரும் கற்களை வீசி தாக்கிக் கொண்டனர். இதில், காவல்துறையை சேர்ந்தவர்கள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

village
villagept desk

மேலும், இரவு நேரத்தில் பட்டியலின மக்களின் குடிசைகளுக்கு தீ வைக்கப்பட்டதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. மீண்டும் மோதல்களை தவிர்க்க அப்பகுதியில் துணை காவல் கண்காணிப்பாளர் தமிழரசி, வட்டாட்சியர் விஜயக்குமார் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

கிருஷ்ணகிரி இரு சமூகத்தினரிடையே மோதல்
மீண்டும் ஒரு கொடூர செயல்... பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு

மோதலின் பின்னணி என்ன?

சோக்காடி கிராமத்தில் உள்ள பழமை வாய்ந்த மாரியம்மன் கோயிலில் நடைபெறும் புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த பட்டியலின மக்கள் கிரானைட் கற்களை பாலிஷ் செய்தபோது, அதிகளவு தூசி வெளிவருவதாகக் கூறி, மற்றொரு பிரிவைச் சேர்ந்த குழுவினர் கோயில் பணியை நிறுத்தினர். இதனையடுத்து அதிமுகவை சேர்ந்த கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அம்சவேணியின் கணவர் ராஜன் பேச்சுவார்த்தை நடத்த வந்தபோது ஏற்பட்ட வாக்குவாதம் இரு பிரிவினர் இடையேயான மோதலாகஉருவெடுத்தது.

arrested
arrestedpt desk

இதுகுறித்து இருதரப்பினர் இடையே நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் அப்பகுதியில் பதற்றம் நீடித்து வருகிறது. இந்நிலையில், 23 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், 13 பேரை கைது செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com