மீண்டும் ஒரு கொடூர செயல்... பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் மீது மனிதக்கழிவு

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீர் மனிதக் கழிவை கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் நடுநிலைப்பள்ளி ஒன்றின் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் மனிதக்கழிவு பூசப்பட்ட ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது.
 மேட்டூர்
மேட்டூர் புதிய தலைமுறை

புதுக்கோட்டை மாவட்டம் வேங்கைவயலில் குடிநீரில் மனிதக் கழிவை கலந்த விவகாரம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்நிலையில் மேட்டூர் அருகே காவேரிபுரம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியின் காலை உணவுத்திட்ட சமையல் கூடத்தில் இதேபோன்ற ஒரு கொடூரம் நிகழ்ந்துள்ளது. இதுகுறித்த தகவலறிந்த மேட்டூர் கோட்டாட்சியர் தணிகாசலம், கொளத்தூர் வட்டாட்சியர் முருகன், காவல் துணை கண்காணிப்பாளர் மரியமுத்து ஆகியோர் நிகழ்விடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.

வேங்கைவயல் - மேட்டூர் ஊராட்சி ஒன்றிய  நடுநிலைப்பள்ளி
வேங்கைவயல் - மேட்டூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிபுதிய தலைமுறை

பின் தூய்மைப் பணியாளர்கள் மூலம் காலை உணவுத்திட்ட சமையற்கூடம் தூய்மைப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பள்ளி தலைமை ஆசிரியர் அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.

 மேட்டூர்
அரசுப் பள்ளியின் ‘காலை உணவு திட்டத்தில்’ நடந்த சாதிய கொடுமை: அமைச்சர் கீதா ஜீவன் கொடுத்த விளக்கம்!

பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததாலும், இரவு நேர காவலாளி இல்லாததாலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டினர். இதையடுத்து பள்ளிக்கு தேவையான சுற்றுச்சூழல் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகளை உடனே செய்திட கோட்டாட்சியர் உத்தரவிட்டார். காலை உணவுத்திட்ட சமையற்கூடத்தின் மீது மனித கழிவு பூசிய நபர்  குறித்து சுற்றுவட்டார பகுதி மக்களிடமும் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com