தமிழ்நாடு
ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா
ஸ்டெர்லைட் போராட்டத்தை தூண்டியது சீன நிறுவனம் - வேதாந்தா
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்துக்கு பின்னணியில் சீன நிறுவனம் உள்ளதாக வேதாந்தா நிறுவனம் உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கின் விசாரணையின் போது வேதாந்தா நிறுவனம் இந்த வாதத்தை முன்வைத்துள்ளது. , “ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதன் பின்னணியில் சீன நிறுவனம் உள்ளது. போராட்டத்தை தூண்டியதும், போராட்டக்காரர்களுக்கு நிதியுதவி வழங்கியதும் சீன நிறுவனம் தான். ஒரே நேரத்தில் 20 ஆயிரம் பேர் எப்படி கூடினார்கள் என்பது தெரியவில்லை.
சில என்.ஜி.ஓக்களால் திட்டமிட்டு போராட்டம் நடத்தப்பட்டது. தொழில் போட்டி காரணமாக போராட்டத்தை சிலர் தூண்டியுள்ளனர். ஆலை மூடப்பட்டாலும் பராமரிப்பு அனுமதி மறுப்பதால் அமிலம் வெளியேறி கட்டடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது” என வேதாந்தா சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.