a child with mumps
a child with mumpsAI generated image

தமிழகத்தில் அதிகரிக்கு பொன்னுக்கு வீங்கி வைரஸ்.. பொது சுகாதாரத்துறை எச்சரிக்கை.!

தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது.
Published on
Summary

தமிழகத்தில் பருவகால மாற்றத்தால் குழந்தைகளுக்கு மம்ப்ஸ் வைரஸ் பாதிப்பு அதிகரித்துள்ள நிலையில், நோய்த்தொற்றுக்கு உள்ளானவர்கள் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

தமிழகத்தில் பருவகால மாற்றத்தின் காரணமாக குழந்தைகளிடையே பொன்னுக்கு வீங்கி வைரஸ் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியதால் முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு பொது சுகாதாரத் துறை அறிவுறுத்தியுள்ளது. மம்ப்ஸ் (MUMPS) எனப்படும் வைரஸ் மூலம் பரவும் பொன்னுக்கு வீங்கி நோய், காதுகள் மற்றும் தாடைக்கு இடையே உள்ள பகுதியில் வீக்கத்தை ஏற்படுத்துகிறது.

பொன்னுக்கு வீங்கி வைரஸ்
பொன்னுக்கு வீங்கி வைரஸ்

உமிழ்நீர் சுரப்பிகளில் அத்தகைய வீக்கம் உருவாவதால் கடுமையான வலி மற்றும் காய்ச்சல் ஏற்படக்கூடும். அதனுடன் தலைவலி, பசியின்மை, கன்னங்கள் வீங்குதல், சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளும் காணப்படலாம்.

பொன்னுக்கு வீங்கியால் பாதித்தவர்களின் இருமல், தும்மல், சளி, உமிழ்நீர் திவலைகள் மூலம் பிறருக்கு அது பரவும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். இதற்கென தனியாக தடுப்பு மருந்துகள் தேவையில்லை என்பதால், நோய் தொற்றுக்குள்ளானவர்கள் தனிமைப்படுத்திக் கொண்டு இருந்தாலே அந்த பாதிப்பு சரியாகிவிடும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

a child with mumps
இன்றைய இளைஞர்களிடையே காணப்படும் அதீத கோபம்.. குறைக்க வைட்டமின் மாத்திரைகள் உதவுமா..?

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com