முதலமைச்சரின் 'இலவச மருத்துவ காப்பீடு அட்டை'யின் முழு பயன்கள்!

முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டையை, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை உட்பட 1027 சிகிச்சை முறைகள், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கு பயன்படுத்தலாம்.
முதலமைச்சரின் 'இலவச மருத்துவ காப்பீடு அட்டை
முதலமைச்சரின் 'இலவச மருத்துவ காப்பீடு அட்டைமுகநூல்

செய்தியாளர்: பிரசன்ன வெங்கடேஷ்

குழந்தைகள் முதல் முதியோர் வரை அனைத்து வயதினருக்கும் இதயம், நரம்பு, சிறுநீரகம் தொடர்பான அறுவை சிகிச்சைகளை பெற முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டை உதவுகிறது.

அங்கீகரிக்கப்பட்டுள்ள மருத்துவமனைகளில் குறிப்பிட்ட நோய்களுக்கு இந்த அட்டைமூலம் கட்டணமில்லா மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த அட்டை மூலமாக ஒரு குடும்பத்திற்கு ஆண்டுக்கு 5 லட்சம் ரூபாய் வரையிலான சிகிச்சைகளை பெற முடியும்.

ஆண்டு வருமானம் 1,20,000 ரூபாய்க்கும் குறைவாக உள்ள குடும்பங்கள், முதலமைச்சரின் இலவச காப்பீடு திட்ட அட்டையை பெறலாம். வருமான சான்று, குடும்ப அட்டையுடன் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள காப்பீடு அட்டை வழங்கும் மையத்திற்கு சென்று விண்ணப்பிக்க வேண்டும். அங்கு சான்றிதழ்களை சரிபார்த்த பின்னர் குடும்ப தலைவரின் பெயரில் காப்பீடு அட்டைக்கான 22 இலக்க எண்ணை கொடுக்கப்பார்கள்.

முதலமைச்சரின் 'இலவச மருத்துவ காப்பீடு அட்டை
1 மணி செய்திகள்|மீண்டும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை

ஒருவேளை காப்பீடு அட்டை வருவதற்கு முன்னதாகவே மருத்துவ சிகிச்சை தேவைப்பட்டால், 22 இலக்க எண்ணைக் கொண்டு சிகிச்சை பெறலாம். குடும்பத் தலைவரின் பெயரில் வழங்கப்படும் காப்பீடு அட்டை மூலம், குடும்ப அட்டையில் பெயர் இடம்பெற்றிருக்கும் அனைவரும் பயன்பெற முடியும்.

இந்த அட்டையை, பச்சிளங் குழந்தைகளுக்கான சிகிச்சை உட்பட 1027 சிகிச்சை முறைகள், 154 தொடர் சிகிச்சை வழிமுறைகளுக்கு பயன்படுத்தலாம்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com