1 மணி செய்திகள்|மீண்டும் பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு - வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை

மீண்டும் குற்றால அருவியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு முதல் வட மாநிலங்களில் வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை வரை... மதியம் 1 மணி வரையிலான செய்திகள்
1 மணி செய்திகள்
1 மணி செய்திகள்Facebook
  • நாளுக்குநாள் அதிகரிக்கும் போக்குவரத்து நெரிசலால் திணறும் தலைநகர் சென்னை. இந்நிலையில், மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் சாலை மேம்பாலப் பணிகளை விரைந்து முடிக்க மக்கள் வலியுறுத்தல்.

  • சென்னை தலைமை நீதிபதி கங்காபுர்வாலா நாளையுடன் ஓய்வுபெறும் நிலையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக ஆர்.மகாதேவன் நியமனம்.

  • காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தியை புகழ்ந்து வெளியிட்ட பதிவை நீக்கினார் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ. அவர் வெளியிட்ட பதிவு கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்திய சூழலில் சர்ச்சைக்குரிய பதிவை நீக்கியதாக கூறப்படுகிறது.

  • மணப்பாறை அரசு மருத்துவமனையில் ஸ்கேன் பிரிவுக்கு மருத்துவர்கள் வராததால் 4 மணி நேரம் தவித்த நோயாளிகள்.இ தனால், காலை உணவுகூட சாப்பிடாமல் காத்திருந்ததாக பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

  • பழைய குற்றால அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதன் புதிய காட்சி வெளியீடு. இந்நிலையில், வீடியோவை எடுப்பதை நிறுத்திவிட்டு மக்களை காப்பாற்றுமாறு தந்தையிடம் கெஞ்சிய மகள்.

  • தென் மாநிலங்களில் இதமான வானிலை நிலவும் சூழலில் வட மாநிலங்களில் வாட்டி வதைக்கும் வெப்பம். இதன்படி, டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களுக்கு வெப்ப அலைக்கான சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

  • மக்களவைத் தேர்தலில் குறைவான தொகுதிகளில் தங்கள் கட்சி போட்டியிடுவது மிகவும் கவனமாக, திட்டமிட்டு எடுக்கப்பட்ட முடிவு என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே விளக்கமளித்துள்ளார்.

  • நெல்லை அருகே அரசுப் பேருந்தில் காவலர் மற்றும் நடத்துநர் இடையே வாக்குவாதம். அரசுப்பணியில் இருப்பதால் டிக்கெட் எடுக்க முடியாது என காவலர் மறுத்ததாக குற்றச்சாட்டு.

  • சேலம் மாவட்டம் ஏற்காட்டில் மலர்க் கண்காட்சி தொடங்கியுள்ளது. இதில், 7 லட்சம் மலர்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கண்கவர் வடிவங்களை பார்த்து சுற்றுலாப் பயணிகள் வியப்பு.

  • இரண்டாவது குவாலிஃபயர் போட்டியில் ஹைதராபாத் அணியுடன் மோதப்போவது யார்?. இந்நிலையில், எலிமினேட்டர் ஆட்டத்தில் ராஜஸ்தான் - பெங்களூரு அணிகள் இன்று பலப்பரீட்சை.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com