“தொண்டை வலியை விட தொண்டே முக்கியம்..” - முதல்வர் ஸ்டாலின் பேச்சு

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்துள்ளார்.

கலைஞர் மகளிர் உரிமைத்தொகை கோரி மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியான மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கும் திட்டத்தை இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “என்னால் மக்களை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அதனால் உங்களை சந்திக்க வந்துள்ளேன். காய்ச்சல் சரியாகிவிட்டாலும், தொண்டை வலி இன்னும் சரியாகவில்லை. தொண்டை வலியை விட தொண்டில் தொய்வில் ஏற்படக்கூடாதென இங்கு வந்துவிட்டேன்.

மகளிர் உரிமைத்தொகை வாக்குறுதியை திமுக அரசால் நிறைவேற்ற முடியாதென கூறினர். ஆனால் இப்போது வாக்குறுதியை நாங்கள் நிறைவேற்றியுள்ளோம்.

முதல்வர் மு.க.ஸ்டாலின்
மேல்முறையீடு செய்தவர்களில் தகுதியானோருக்கு இன்று முதல் ‘கலைஞர் மகளிர் உரிமைத்தொகை’!

மகளிர் உரிமைத்திட்டம் எந்த சின்ன புகாருக்கும் இடமின்றி வெற்றிகரமாக செயல்பட்டு வருகிறது. பாரபட்சமின்றி தகுதியான அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. மிகப்பெரிய சாதனையை அமைதியாக செய்துகாட்டி வெற்றி பெற்றுள்ளோம்” என்றர்.

முதல்வர் பேசியதன் முழு விவரத்தை, கீழ் இணைக்கப்பட்டுள்ள வீடியோவிலும் அறியலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com