“பெரியாருக்கோ, கலைஞருக்கோ கிடைக்காத வாய்ப்பு..” - மூத்த தலைவர் நல்லகண்ணு குறித்து முதல்வர் ஸ்டாலின்!
“எந்த அச்சுறுத்தலுக்கும் அஞ்சாமல் நெஞ்சுறத்துடன் மக்களுக்காக உழைத்தவர் நல்லகண்ணு” என அவரது நூற்றாண்டு விழாவில் முதலமைச்சர் மு. க.ஸ்டாலின் புகழாரம் சூட்டியுள்ளார்.
சென்னை கலைவாணர் அரங்கத்தில் இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் நல்லகண்ணுவின் நுற்றாண்டு விழா இன்று நடைபெற்றது.
இதில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நல்லகண்ணுவின் வாழ்க்கை வரலாற்றை விளக்கும் பாடலையும், கவிதை நூலையும் வெளியிட்டார்.
தொடர்ந்து நல்லக்கண்ணுவுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்து கூறினார். பின் மேடையில் பேசிய முதலமைச்சர், “நல்லகண்ணுவுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது எனக்கு கிடைத்த பெருமை. நூறு வயதைக் கடந்தும் மக்களுக்காக பணியாற்றும் வாய்ப்பு, பெரியாருக்கோ, கலைஞருக்கோ கிடைக்கவில்லை. என்றபோதும் அது நல்லகண்ணுவுக்கு கிடைத்துள்ளது. திராவிட இயக்கம் உருவாகாமல் போயிருந்தால் நானே கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்திருப்பேன் என்றவர் தலைவர் கலைஞர். இதையெல்லாம் சொல்லும் என் பெயரே, ஸ்டாலின்தான். தலைவர் கலைஞர் அவர்களின் அகத்தில் இருந்த கண்தான், நல்ல‘கண்’ணு” என்றார். முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்தார்.