“இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பை சிதைக்க பாஜக முயற்சி”– ஆடியோ சீரிஸில் முதல்வர் குற்றச்சாட்டு

“இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனா இந்தியாவுக்காக பேசப்போறதுதான் இந்த PODCAST சீரியஸோட நோக்கம்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

முதல்வர் மு.க.ஸ்டாலின், Speaking For INDIA என்ற ஆடியோ சீரிஸை இன்று தொடங்கியிருக்கிறார்.

cm stalin
“1.. 2.. 3.. ஆரம்பிக்கலாங்களா? தெற்கிலிருந்து ஒரு குரல்...” - Audio Series ஆரம்பிக்கிறார் முதல்வர்!

அதில் பேசியுள்ள அவர்,

“தமிழ்நாட்டின் முதலமைச்சரா, இந்திய நாடாளுமன்றத்தின் 3வது பெரிய கட்சியான திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரா இருக்கிற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின், உங்களில் ஒருவனா இந்தியாவுக்காக பேசப்போறதுதான் இந்த PODCAST சீரிஸோட நோக்கம்.

காலம் காலமா இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்த சிதைத்து, இந்தியாவோட அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாரதிய ஜனதா கட்சி முயற்சி பண்ணுது. 2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாரதிய ஜனதா கட்சி, தேர்தலுக்கு முன்னாடி கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேத்தல.

‘வெளிநாட்டுல இருந்து கருப்பு பணத்தை மீட்டுவந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம்; ஆண்டு தோறும் 2 கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; உழவர்களின் வருமானத்த இரண்டு மடங்கு ஆக்குவோம்; சொந்த வீடு இல்லாதவங்களே இருக்க மாட்டாங்க. இந்தியா 5 டிரில்லின் டாலர் பொருளாதார நாடாக மாறும்’ - இப்படியெல்லாம் சொன்னாங்க (கடுமையான வார்த்தைகளால்). 10 ஆண்டாக போகுது. ஆனால், எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றல.

PM Modi
PM Modi pt desk

குஜராத் மாடல்னு பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், இப்போது என்ன மாடல் என்றே தெரியாமல் முடியப்போகுது. திராவிட மாடல், என்னென்ன சாதனைகளை தமிழ்நாட்டுல செஞ்சிருக்குன்னு நாம புள்ளி விவரத்தோடு அடுக்கிய பிறகு, அவங்க பெருமையா பேசிவந்த குஜராத் மாடல் பற்றி இப்போ மறந்தும்கூட பேசுறதில்ல” என்று சாடினார். இதுதொடர்பாக மேலும் அவர் பேசியவற்றின் முழு வீடியோவை, இணைக்கப்பட்டுள்ள லிங்க்-ல் காணலாம்.

X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com