இளைஞர் பலி
இளைஞர் பலிpt desk

சென்னை | அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்து - உணவு டெலிவரி செய்யும் இளைஞர் பலி

பூந்தமல்லி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் உணவு டெலிவரி செய்யும் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.
Published on

செய்தியாளர்: ஆவடி நவீன் குமார்

பூந்தமல்லி, கந்தசாமி நகர் பகுதியைச் சேர்ந்த செல்வம் என்பவரது மகன் ராஜசேகர் (22). ஆன்லைனில் உணவு டெலிவரி செய்யும் வேலை செய்து வந்த இவர் நேற்று இரவு வேலை முடித்துவிட்டு வீட்டிற்கு இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பூந்தமல்லி - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை குத்தம்பாக்கம் சிக்னல் அருகே சென்ற போது அடையாளம் தெரியாத வாகனம், இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளது.

accident
accidentகோப்புப்படம்
இளைஞர் பலி
சென்னை | "இப்படியெல்லாம் கூட நடக்குமா" ஏடிஎம் மையத்தில் நூதன கொள்ளை முயற்சி.. 3 பேர் கைது!

இதில், தூக்கி வீசப்பட்ட ராஜசேகர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார், சம்பவ இடத்திற்குச் சென்று உயிரிழந்த ராஜசேகர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக போரூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதைத் தொடர்ந்து விபத்திற்கு காரணமான வாகனத்தை தேடி வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com