”ஐபிஎல் மேட்ச் பாத்துட்டு வரேன் ஹார்ன் அடிக்காம ஓட்டுங்க" - பேருந்தில் இளைஞர் செய்த மோசமான செயல்!

ஐபிஎல் மேட்ச் பார்த்து வரும் ஆர்வத்தில் முகமது இஸ்மாயில் பேருந்து ஓட்டுநரிடம் "அண்ணா ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டுங்க; ஐபிஎல் மேட்ச் பாத்துட்டுருக்கேன். தொந்தரவா இருக்கு" என கூறியுள்ளார்.
பிரச்சனை செய்த இளைஞர்
பிரச்சனை செய்த இளைஞர்PT

”ஐபிஎல் மேட்ச் பாத்துட்டு வரேன், ஹார்ன் அடிக்காம வண்டி ஓட்டுங்கண்ணா" - பேருந்து ஓட்டுநரிடம் வம்பிழுத்த இளைஞரால் பரபரப்பு.

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ அணிகளுக்கிடையேயான ஐபி.எல் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியை காண பல ரசிகர்கள் முன்னதாகவே மைதானத்திற்கு வந்தனர்.

இந்தநிலையில், சென்னை பெரம்பூரில் இருந்து அண்ணா சதுக்கம் வரையிலான தடம் எண் கொண்ட 29A என்கிற மாநகர பேருந்தானது அண்ணா சாலை வழியாக சேப்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்பொழுது இளைஞர் ஒருவரை பேருந்து ஓட்டுநர் சங்கர் மற்றும் நடத்துநர் இறங்கும்படி கூறியுள்ளனர்.

பிரச்சனை செய்த இளைஞர்
மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நிகழ்ந்த கொலை – பக்தர்கள் அதிர்ச்சி

இதனால், ஆத்திரமடைந்த இளைஞர் பேருந்தில் இருந்து இறங்கி பேருந்தின் கண்ணாடியை கல்லால் உடைத்துவிட்டு தப்பியோடியுள்ளார். அவரை மடக்கி பிடித்த ஓட்டுநர் மற்றும் பொதுமக்கள் அருகிலுள்ள காவல் துறையிடம் தகவல் கொடுத்துள்ளனர்.

பிடிபட்ட இளைஞரை சிந்தாதிரிப்பேட்டை போலீசார், காவல் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டபோது அவர் திருவல்லிக்கேணி பகுதியைச் சேர்ந்த முகமது இஸ்மாயில் (19) என்பது தெரியவந்தது. இவர் ஓட்டேரி பகுதியில் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வருவதும் தெரிய வந்தது.

இந்த நிலையில் நேற்று மாலை பணி முடித்தவுடன் திருவல்லிக்கேணியில் உள்ள தனது வீட்டிற்கு வருவதற்காக பேருந்து எறிய இளைஞர் பேருந்து ஓட்டுநர் இருக்கைக்கு அருகே அமர்ந்து தனது செல்போனில் ஐபிஎல் மேட்ச் பார்த்து வந்துள்ளார்.

ஐபிஎல் மேட்ச் பார்த்து வரும் ஆர்வத்தில் முகமது இஸ்மாயில் பேருந்து ஓட்டுநரிடம் "அண்ணா ஹார்ன் அடிக்காமல் வண்டி ஓட்டுங்க; ஐபிஎல் மேட்ச் பாத்துட்டுருக்கேன். தொந்தரவா இருக்கு" என கூறியுள்ளார்.

PT

பேருந்து ஓட்டுநரும் பேருந்து ஓட்டி வர அவ்வப்போது ஹார்ன் அடித்து வந்துள்ளார். அதனையடுத்து, முகமது இஸ்மாயில் எழும்பூர் ரவுண்டானா அருகே பேருந்து நடத்துநர் சங்கரை பார்த்து "ஹார்ன் அடிக்காமல் ஓட்டு" என ஆவேசமாக பேசியுள்ளார்.

இதனை அடுத்து பேருந்து ஓட்டுநர் சங்கர் பேருந்தின் பின்னிருக்கையில் சென்று அமருமாறு கூறியுள்ளார். அதற்கு முகமது இஸ்மாயில் "என்னால் பின் இருக்கையில் அமர்ந்து வர இயலாது; நீங்கள் ஹார்ன் அடிக்காமல் பேருந்து ஓட்டுங்கள்" எனவும் கூறியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையில் தகராறு எழுந்துள்ளது.

இதனையடுத்து பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர் இளைஞரை கீழே இறக்கி விட்டுள்ளனர். இந்த ஆத்திரத்தில் முகமது இஸ்மாயில் கல்லால் பேருந்து கண்ணாடியை அடித்தது தெரிய வந்தது.

விசாணைக்கு பின்னர், வழக்குப் பதிவு செய்து கைது செய்த சிந்தாதிரிப்பேட்டை போலீசார், எச்சரித்து எழுதி வாங்கிக்கொண்டு முகம்மது இஸ்மாயிலை காவல் நிலைய ஜாமீனில் அனுப்பி வைத்தனர்.

இதையும் படிக்கலாம் :ஈராக்: ரஃபா பகுதியில் இஸ்ரேல் தாக்குதல் - மரணத்தை வென்ற கர்ப்பிணியின் குழந்தை

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com