மதுரை: கள்ளழகர் ஆற்றில் இறங்கும் இடத்தில் நிகழ்ந்த கொலை – பக்தர்கள் அதிர்ச்சி

மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவில் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவர் படுகாயங்களுடன் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சோனை
சோனைpt desk

செய்தியாளர்: மணிகண்டபிரபு

மதுரை ஆழ்வார்புரத்தைச் சேர்ந்தவர் கார்த்திக், மற்றும் சிவகங்கை மாவட்டம் திருப்பாச்சேத்தி பகுதியைச் சேர்ந்த சாமிக்கண்ணு என்பவரின் மகன் சோனை (28). நண்பர்களான இருவரும் மதுரை மதிச்சியம் பகுதியில் ஆடை தேய்த்துக் கொடுக்கும் கடை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இன்று மதுரை சித்திரை திருவிழாவை முன்னிட்டு கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் நிகழ்வை காண லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

madurai GH
madurai GH pt desk

அப்போது கள்ளழகர் வைகையாற்றில் எழுந்தருளும் பகுதியில், இன்று அதிகாலை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கார்த்திக், சோனை ஆகிய இருவரையும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த இருவரும் மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி சோனை உயிரிழந்தார். கார்த்திக்கிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து மதிச்சியம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

சோனை
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இளம்பெண் விபரீத முடிவு... கொலையா? தற்கொலையா?

முதற்கட்ட விசாரணையில், குடும்ப பிரச்னை, முன் விரோதம் காரணமாக இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது. கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடத்திற்கு அருகில் இந்த சம்பவம் நடைபெற்றதால் கள்ளழகரை காண வந்த பக்தர்களிடையே பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com