சென்னை | கார்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து – கர்ப்பிணி உட்பட இருவர் உயிரிழப்பு..!
செய்தியாளர்: சாந்த குமார்
சென்னை அனகாபுத்தூர் மதுரவாயல் புறவழிச் சாலையில் நேற்றிரவு, போரூரில் இருந்து தாம்பரம் நோக்கி வாடகை கார் மூலம் பத்மநாபன் அவருடையை குடும்பத்தினருடன் பயணித்துள்ளார். அப்போது மணிகண்டன் என்பவர் மதுபோதையில் எதிர்திசையில் தவறான பாதையில் காரை ஓட்டி வந்துள்ளார்.
இதனால் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. காரில் இருந்த அனைவரும் பலத்த காயமடைந்தனர். இதில், பலத்த காயமடைந்த பத்மநாபன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். 3 மாத கர்ப்பிணி பெண் தீபிகா (23) உயிரிழந்தார்.
இந்துராணி (51), மற்றும் கார் ஓட்டுநர் புவனேஷ் (21), காயத்துடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்தை ஏற்படுத்திய கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27), என்பவரை குரோம்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் கைது செய்து காரை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர்.