சாலையில் நடந்துச்சென்ற சிறுமியை விரட்டி விரட்டி கடிக்கச் சென்ற நாய்கள்! பதைபதைக்கும் CCTV காட்சிகள்!

நாய் தனது மகளை துரத்துவதை கண்ட அவரது தாய் வேகமாக ஓடி வந்து நாய்களை துரத்தியுள்ளார். மேலும், அருகாமையில் இருந்த ஒரு நபரும் நாய்களை துரத்தியுள்ளார்.
நாய்கள்
நாய்கள்புதியதலைமுறை

சென்னையில் சாலையில் நடந்து சென்ற சிறுமியை கடிப்பதற்காக துரத்தும் நான்கு தெரு நாய்கள். ஒரு நாய் கடித்ததில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமி.

பெரம்பூர் கௌதமபுரம் ஹவுசிங் போர்டு பகுதியில் வசித்து வரும் அமித் என்பவரின் இரண்டாம் வகுப்பு படிக்கும் மகள் நேற்று முன்தினம் (18 ம் தேதி) மசூதிக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு திரும்ப வந்து கொண்டிருந்தார். அப்போது நான்கு நாய்கள் கடிப்பதற்காக சிறுமியை துரத்தியுள்ளது. விடாமல் தொடர்ச்சியாக விரட்டிச் சென்ற நாய்களை கண்டு அச்சிறுமி பதறி ஓடியுள்ளார்.

நாய்கள்
இது நல்லாருக்கே!! தெரு நாய் தொல்லைக்கு வரப்போகும் முடிவு; சென்னை மக்களுக்கு நற்செய்தி!

நாய் தனது மகளை துரத்துவதை கண்ட அவரது தாய் வேகமாக ஓடி வந்து நாய்களை துரத்தியுள்ளார். மேலும், அருகாமையில் இருந்த ஒரு நபரும் நாய்களை துரத்தியுள்ளார்.

பின்னர் சிறுமியை பத்திரமாக வீட்டுக்கு அழைத்துச் சென்று பார்த்தபோது ஒரு நாய் கடித்து அதன் பல் தடம் சிறுமியின் உடலில் பதிந்து இருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து சிறுமியை பெரியார் நகர் அரசு மருத்துவமனை அழைத்துச் சென்று அங்கு நாய் கடிக்கான தடுப்பூசி போட்டு பெற்றோர் வீட்டுக்கு அழைத்து வந்துள்ளனர்.

இந்த நிலையில், சிறுமியை நான்கு தெரு நாய்கள் சேர்ந்து கடிக்க துரத்தும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com