ஈரோடு: விளையாடிக் கொண்டிருந்தபோது திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த கால்பந்து வீரர்

ஈரோட்டில் விளையாடிக் கொண்டிருந்த கால்பந்தாட்ட வீரர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Footballer
Footballerpt desk

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு மாவட்டம் சூரம்பட்டியில் சுப்ரமணி என்பவர் குடும்பத்துடன் வசித்து வருகிறார். பத்திரம் எழுதும் வேலை செய்து வரும் சுப்ரமணி, தினமும் வீட்டின் அருகே உள்ள சிறிய மைதானத்தில் கால்பந்து விளையாடி வந்துள்ளார். இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் மைதானத்திற்கு சென்ற அவர் விளையாடிக் கொண்டிருந்தார்.

Footballer
Footballerpt desk

அப்போது திடீரென மயக்கமடைந்த அவர் பின்பக்கமாக விழுந்துள்ளார். இதனையடுத்து சக வீரர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு சுயநினைவின்றி இருந்த சுப்ரமணியை, ஈரோடு அரசு தலைமை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள் சுப்ரமணி ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.

Footballer
மதுரை: குப்பையோடு குப்பையாக கிடந்த மனநலம் பாதிக்கப்பட்ட வடமாநில நபரை மீட்ட சமூக ஆர்வலர்கள்

இதனையடுத்து சக கால்பந்து வீரர்கள் மற்றும் சுப்ரமணியின் பெற்றோர்கள் கதறி அழுத சம்பவம் அங்கிருந்தவர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com