“என் உயிரை மாய்த்துக்கொள்ள மனைவி கொடுத்த மன உளைச்சலே காரணம்” - போலீசார் மரணத்தில் சிக்கிய கடிதம்!

பட்டினப்பாக்கம் காவலர் குடியிருப்பில் தற்கொலை செய்து கொண்ட உதவி ஆய்வாளர் எழுதி வைத்துள்ள உருக்கமான கடிதம் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tragic decision
Tragic decisionpt desk
Published on

செய்தியாளர்: ஜெ.அன்பரசன்

சென்னை பட்டினப்பாக்கம் பிஆர்ஓ காவலர் குடியிருப்பை சேர்ந்தவர் எஸ்.பி.சி.ஐ.டி உதவி ஆய்வாளர் ஜான் ஆல்பர்ட் (33). இவர், நேற்று மதியம் திடீரென தனது அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தொடர்பாக பட்டினப்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இந்நிலையில் தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எஸ்.ஐ ஜான் ஆல்பர்ட் எழுதிய உருக்கமான கடிதம் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Letter
Letterpt desk

அந்த கடிதத்தில், தான் தகாத உறவில் இருப்பதாக கூறி திருமணமான நாள் முதல் தற்போது வரை தன்னையும் மற்றும் தனது பெற்றோர்களை மிகவும் ஆபாசமாக மனைவி பேசி வருவதாகவும், தந்தையர் தினத்தில் தனது மகளை கொஞ்சும் போது மிகவும் ஆபாசமாக தன்னை திட்டியது மன உளைச்சலை ஏற்படுத்தியதாகவும் அந்த கடிதத்தில் எழுதியுள்ளார். இந்த மன உளைச்சலை தவிர்ப்பதற்காக ஆன்லைன் ரம்மி விளையாட்டில் ஈடுபட்டு கடன் வாங்கி ஆயிரக்கணக்கில் பணத்தை இழந்ததாகவும் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Tragic decision
தொடரும் சோகம் | அமெரிக்காவில் இந்திய பெண் சுட்டுக்கொலை.. இந்தியரே அரங்கேற்றிய கொடூரம்!

தினம் தினம் இறந்து போன வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த மண்ணை விட்டு பிரிந்து செல்வதாகவும், வீர மரணம் அடைந்திருந்தால் காட் ஆப் ஆனர் செய்திருப்பார்கள் எனவும் தற்போது கோழை மரணம் அடைவதால் தனக்கு பிடித்த காக்கி உடையில் தற்கொலை செய்து கொள்வதாகவும் அவர் கடிதத்தில் உருக்கமாக எழுதியுள்ளார். தனது மனைவி தன்னை ஆபாசமாக திட்டக்கூடிய ஆடியோக்கள் தனது போனில் ரெக்கார்ட் செய்து இருப்பதாகவும் தனது நண்பர் மூலம் பாஸ்வேர்டை வாங்கி காவல்துறையினர் பார்க்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Death
DeathFile Photo

நான் கடன் பிரச்னையால் தான் தற்கொலை செய்து கொண்டேன் என யாரும் எண்ண வேண்டாம். மன உளைச்சல் காரணமாகதான் இறப்பதாகவும் அவர் கடிதத்தில் தெரிவித்துள்ளார். மேலும், தான் வாங்கிய கடன் மற்றும் தான் சேர்த்து வைத்து வாங்கிய அனைத்தையும் தனது பெற்றோரிடம் ஒப்படைக்க வேண்டும் என கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அவர், தனது உடலை பெற்றோரிடம் கொடுக்குமாறும், தனது சடங்கிற்கு மனைவி வர வேண்டாம். அப்போதுதான் தனது ஆன்மா சாந்தி அடையும் எனவும் தெரிவித்துள்ளார்.

Tragic decision
கர்நாடகா ரேணுகாசாமி கொலை வழக்கு - சம்பவத்தின்போது நடிகர் தர்ஷனுடன் இந்த காமெடி நடிகர் இருந்தாரா?

தனது பெற்றோருக்கும் தனது நண்பர்களுக்கும் தனது உயர் அதிகாரிகளுக்கும் நன்றியை தெரிவித்துள்ள அவர் அனைவரும் என்னை மன்னித்து விடுங்கள் என உருக்கமாக கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த கடிதத்தை கைப்பற்றியுள்ள போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com