தர்ஷன்
தர்ஷன்புதியதலைமுறை

கர்நாடகா ரேணுகாசாமி கொலை வழக்கு - சம்பவத்தின்போது நடிகர் தர்ஷனுடன் இந்த காமெடி நடிகர் இருந்தாரா?

ரசிகரை கன்னட நடிகர் தர்ஷன் கொலை செய்த வழக்கில் நகைச்சுவை நடிகர் சிக்கண்ணாவுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்
Published on

கன்னட நடிகர் தர்ஷனின் காதலி பவித்ரா கௌடாவுக்கு ஆபாச குறுஞ்செய்திகள் அனுப்பி தொல்லை தந்த ரசிகர் ரேணுகாசாமி என்பவர், நடிகர் தர்ஷன் கொலை செய்ததாக புகார் எழுந்திருந்தது. இதில் தர்ஷன், பவித்ரா கௌடா உட்பட 19 பேரை போலிசார் கைது செய்துள்ளனர்.

நடிகர் தர்ஷன்
நடிகர் தர்ஷன்எக்ஸ் தளம்

இந்த நிலையில் கொலை நடந்த ஜூன் 8ம் தேதி இரவு தர்ஷனுடன் பிரபல நகைச்சுவை நடிகர் சிக்கண்ணாவும் இருந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதை அடுத்து, அவரிடம் விசாரணை நடத்த கர்நாடக காவல்துறை முடிவு செய்து சிக்கண்ணாவுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தர்ஷன்
கர்நாடகா கொலை வழக்கு|கார் டிரைவர் அளித்த பகீர் வாக்குமூலம்.. நடிகர் தர்ஷனை பாதுகாக்கும் காங். ஆட்சி?

கொலை குறித்து சிக்கண்ணாவுக்கு எதுவும் தெரியுமா? என்று விசாரிக்க உள்ளதாக காவல்துறை கூறியுள்ளது. இதற்கிடையே கன்னட திரை உலகின் முன்னனி நட்சத்திரங்கள் பலரும் கொல்லப்பட்ட ரசிகர்களுக்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளனர்.

உபேந்திரா, கிச்சாசுதீப் இருவரும் ரசிகர் ரேணுகாசாமி கொலைக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர். ரேணுகா சாமி மனைவி மற்றும் கருவில் உள்ள அவரது குழந்தைக்கு நீதி வேண்டும் என்று கிச்சா சுதீப் தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com