ஆம்ஸ்ட்ராங் படுகொலை... சென்னை மாநகர காவல் ஆணையர் அதிரடி மாற்றம்!

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், காவல் பயிற்சி கல்லூரியின் DGP யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
சந்தீப்ராய் ரத்தோர், அருண்
சந்தீப்ராய் ரத்தோர், அருண்புதியதலைமுறை

சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர், காவல் பயிற்சி கல்லூரியின் DGP யாக பணியிடை மாற்றம் செய்யப்பட்டுள்ளார். சந்தீப் ராய் ரத்தோருக்கு பதிலாக சட்டம் ஒழுங்கு ADGP அருண், சென்னை மாநகர காவல் ஆணையராக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சமீபத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரான ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்ட நிலையில், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாக உள்ளதாக பலரும் தெரிவித்து வந்தனர். இந்நிலையில், தற்பொழுது தமிழக அரசு, சென்னை மாநகர காவல் ஆணையராக பதவி வகித்து வந்த சந்தீப் ராயை இடமாற்றம் செய்துள்ளது.

சந்தீப்ராய் ரத்தோர், அருண்
ஆம்ஸ்ட்ராங் படுகொலை | வெளிவந்த அதிர்ச்சி தகவல்!

தற்பொழுது சென்னை மாநகர காவல் ஆணையராக அருண் நியகிக்கப்பட்டுள்ளார். இவர் சட்டம் ஒழுங்கு ADGP-யாக பதவி வகித்து வந்தவர். இவரது இடத்திற்கு டேவிட்சன் தேவாசிர்வாதம் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

இதுவரை ஆம்ஸ்டாங்க் கொலை வழக்கில் 11 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் தமிழக உள்துறை முதன்மை செயலாளர் அமுதா இடமாற்ற உத்தரவை பிறப்பித்துள்ளார்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com