சென்னை: போதைக்கு அடிமையான மகனை கொலை செய்த தாய்... விசாரணையில் அம்பலமான பகீர் உண்மை!

சென்னையில், குடிபோதையில் மர்மமான முறையில் உயிரிழந்த நபர்... போதைக்கு அடிமையான மகனை தாயே கொலை செய்தது விசாரணையில் அம்பலமானது.
Tragedy
Tragedypt desk

சென்னை மேற்கு மாம்பலம் பிருந்தாவன் தெரு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேஷ் (40). குடிப்பழக்கத்திற்கு அடிமையான இவர், கடந்த 9 மாதங்களாக தனது மனைவி மற்றும் பிள்ளைகளை பிரிந்து தனியே வசித்து வந்தார். இந்த நிலையில் கடந்த 15ஆம் தேதி வெங்கடேஷ் தனது வீட்டின் முன் தலையில் ரத்த காயத்தோடு இறந்து கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

Arrested
Arrestedpt desk

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற அசோக் நகர் போலீசார், உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதையடுத்து பிரேத பரிசோதனையில் வெங்கடேஷ், தலையில் பலமாக தாக்கப்பட்டு, கழுத்து நெரிக்கப்பட்டு உயிரிழந்தது தெரியவந்தது.

Tragedy
கனடா: இந்திய வம்சாவளி குடும்பத்தை சேர்ந்தவர் வீட்டில் தீ விபத்து - மகளுடன் சேர்ந்து தாய், தந்தை பலி

இதனையடுத்து அவரது தாயார் சாந்தி (58) என்பவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், போதைக்கு அடிமையான வெங்கடேஷ் கடந்த 14 ஆம் தேதி வீட்டில் இருந்த சிலிண்டரை விற்று மது அருந்தி விட்டு வந்ததாகவும் அதனை கேட்ட தன்னை அடித்து துன்புறுத்தியதாகவும் சாந்தி கூறியுள்ளார்.

கொலை
கொலை புதிய தலைமுறை

இதனால் ஆத்திரமடைந்த தாயார் சாந்தி வெங்கடேஷை கட்டையால் தலையில் அடித்து, கழுத்தை நெரித்துக் கொலை செய்ததும் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து சந்தேக மரணத்தை கொலை வழக்காக பதிவு செய்த அசோக் நகர் போலீசார், சாந்தியை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com