தமிழ்நாட்டை உலுக்கிய பாலியல் கொலைக் குற்றவாளி : தாயாரின் கொலை வழக்கில் இருந்து விடுவிப்பு
குன்றத்தூர் சிறுமி கொலை வழக்கில் தூக்கு தண்டனை மற்றும் 46 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற தஷ்வந்த் அவரது தாயார் கொலை வழக்கில் இருந்து அவரை செங்கல்பட்டு நீதிமன்றம் விடுவித்துள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் குன்றத்தூர் தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் தஷ்வந்த் அவரது தந்தை சேகர் மற்றும் தாய் சரளாவுடன் வசித்து வந்த நிலையில் அதே குடியிருப்பு வளாகத்தில் பெற்றோருடன் வசித்து வந்த 6 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். அத்துடன் சிறுமியின் உடலை தேசிய நெடுஞ்சாலையில் பெட்ரோல் ஊற்றி எரித்தார்.
இந்த வழக்கில் தஷ்வந்த்துக்கு செங்கல்பட்டு மகிளா நீதிமன்றம் ஒரு தூக்கு தண்டனை மற்றும் 46 சிறை தண்டனை 2018 ஆம் ஆண்டு வழங்கியது.
இந்த நிலையில், அவரது தாயை சுத்தியால் அடித்து கொலை செய்ததாக தொடரப்பட்ட வழக்கு செங்கல்பட்டு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது போதிய சாட்சியங்கள் இல்லாத காரணத்தினால் அதாவது அவரது தந்தை சேகர் பிறழ் சாட்சி அளித்ததால் தஷ்வந்த் அவரது தாய் கொலை வழக்கில் தற்போது விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இத்தீர்ப்புக்காக செங்கல்பட்டு நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட தஸ்வந்த, தீர்ப்பை தொடர்ந்து சிறுமி ஹாசினி கொலை வழக்கில் மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.