"ஜனவரியை விடவும் பிப்ரவரியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை"- சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்

"ஜனவரியை விடவும் பிப்ரவரியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை"- சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்
"ஜனவரியை விடவும் பிப்ரவரியில் குறைவான பயணிகளின் எண்ணிக்கை"- சென்னை மெட்ரோ நிர்வாகம் தகவல்

சென்னை மெட்ரோ ரயில்களில் கடந்த மாதம் 63.69 லட்சம் பயணிகள் பயணம் செய்திருப்பதாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், சென்னையில் உள்ள மக்களுக்கும் மெட்ரோ ரயில் பயணிகளுக்கும் போக்குவரத்து வசதியை அளித்து வருவதோடு நம்பகதன்மையான பாதுகாப்பான வசதியையும் ஏற்படுத்தி வருகிறது.

அந்த வகையில் நடப்பு ஆண்டு கடந்த மாதம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயிலில் பயணித்துள்ளதாகவும், இந்த பயணிகள் எண்ணிக்கை கடந்த ஜனவரி மாதத்தை விட சற்று குறைவாகவே இருக்கும் என்றும் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:

“01.01.2023 முதல் 31.01.2023 வரை மொத்தம் 66,07,458 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

01.02.2023 முதல் 28.02.2023 வரை மொத்தம் 63,69,282 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். 

அதிகபட்சமாக 10.02.2023 அன்று 2,61,668 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர்.

2023, பிப்ரவரி மாதத்தில் மட்டும் க்யுஆர் குறியீடு (QR Code) பயணச்சீட்டு முறையைப் பயன்படுத்தி 20,200,027 பயணிகள் மெட்ரோ ரயில்களில் பயணம் செய்துள்ளனர். பயண அட்டைகளை (Travel Card Ticketing System) பயன்படுத்தி 39.85,113 பயணிகள் பயணித்துள்ளார்கள்.

நடப்பாண்டில் கடந்த ஜனவரி மாதத்தில் 66,07,458 பயணிகள் பயணித்துள்ளனர். பிப்ரவரி மாதத்தில் 6,69,282 பயணிகள் பயணித்துள்ளனர். கடந்த பிப்ரவரி மாதம் 28 நாட்கள் என்பதால் ஜனவரி மதத்தை விட பிப்ரவரி மாதத்தில் பயணிகளின் எண்ணிக்கை சற்று குறைவாகவே காணப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களுக்கு QR Code பயணச்சீட்டு மற்றும் பயண அட்டைகளை பயன்படுத்தி பயணிக்கும் பயணிகளுக்கு 20%கட்டணத் தள்ளுபடி வழங்கப்படுகிறது மெட்ரோ இரயில்கள் மற்றும் மெட்ரோ இரயில் நிலையங்களை பராமரிப்பதில் மிகுந்த ஒத்துழைப்பு நல்கிவரும் அனைத்து பயணிகளுக்கும் சென்னை மெட்ரோ இரயில் நிர்வாகத்தின் சார்பில் மனமார்ந்த நன்றி என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com