\
சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்pt desk

சென்னை: சவாரி ஏற்றுவதில் தகராறு - பெண் ஆட்டோ ஓட்டுநரை தாக்கிய ஆண் ஆட்டோ ஓட்டுநர் #Video

சென்னையில் சவாரி ஏற்றுவதில் ஏற்பட்ட தகராறில் பெண் ஆட்டோ ஓட்டுநரை கொடூரமாக தாக்கிய ஆண் ஆட்டோ ஓட்டுநர்... சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரப்பரப்பு!
Published on

சென்னை ஆயிரம் விளக்கு கிரீம்ஸ் சாலை அழகிரி நகர் பகுதியைச் சேர்ந்தவர் மூக்காயி (34). கணவரை பிரிந்த இவர், ஆட்டோ ஓட்டி வருகிறார். இந்நிலையில், இவர் நேற்று மதியம் கிரீம்ஸ் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக வந்த வடமாநில நபர்கள், தங்குவதற்கு அறை வேண்டுமென கேட்டதன் பேரில் மூக்காயி தனக்கு தெரிந்த விடுதிக்கு அவர்களை ஆட்டோவில் அழைத்துச் சென்றுள்ளார்.

சிசிடிவி காட்சிகள்
சிசிடிவி காட்சிகள்pt desk

அப்போது அங்கு வந்த அதே பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் கண்ணன் என்பவர் "நான் பேசி வைத்த சவாரியை நீ எதற்கு அழைத்து வந்தாய்? ஏன் விடுதி அறை ஏற்பாடு செய்து கொடுக்கிறாய்?" என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது ஆட்டோ ஓட்டுநர் கண்ணன், அநாகரிகமாக பேசியதோடு மூக்காயி கன்னத்தில் அறைந்து தாக்கியுள்ளார். கொடூரமாக மூக்காயியை கண்ணன் தாக்கும் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

சிசிடிவி காட்சிகள்
ஈரோடு: குழந்தை விற்பனை வழக்கு – தலைமறைவாக இருந்த நபர் கைது

இச்சம்பவத்தில் தாக்குதலுக்கு உள்ளான மூக்காயி, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் ஆயிரம் விளக்கு போலீசார் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com