தலைமறைவாக இருந்த நபர் கைது
தலைமறைவாக இருந்த நபர் கைதுpt desk

ஈரோடு: குழந்தை விற்பனை வழக்கு – தலைமறைவாக இருந்த நபர் கைது

ஈரோட்டில் பச்சிளம் பெண் குழந்தை விற்பனை செய்யப்பட்ட விவகாரத்தில் தலைமறைவாக இருந்து வந்த நபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
Published on

செய்தியாளர்: ரா.மணிகண்டன்

ஈரோடு கனிராவுத்தர் குளத்தில் நித்யா என்பவர் தனது பெண் குழந்தையை நான்கு லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். பின்னர் பணத்தை பங்கு பிரிப்பதில் ஏற்பட்ட தகராறில் தாய் நித்யா மூலம் இச்சம்பவம் வெளியே தெரியவந்தது. இதுதொடர்பாக பெண் குழந்தையின் தாய் நித்யா, இடைதரகர்கள் உள்பட பத்து நபர்களை கைது செய்த காவல்துறையினர் சிறையில் அடைத்தனர்.

Arrested
Arrestedfile

மேலும் இதில் பெண் குழந்தையை புகைப்படம் எடுத்து தரகர்களுக்கு அனுப்பிய கணேசன் என்பவர் தலைமறைவாக இருந்து வந்தார். வடக்கு காவல்துறையினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் அடிப்படையில் கணேசனும் தற்போது கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

தலைமறைவாக இருந்த நபர் கைது
உ.பி.| தீ விபத்தின் போது பல குழந்தைகளின் உயிரை காப்பாற்றிய தந்தை.. ஆனால் அவருக்கு காத்திருந்த சோகம்!

Related Stories

No stories found.
X
logo
Puthiyathalaimurai
www.puthiyathalaimurai.com